Friday, 8 October 2021

Yaar Vendum Naatha யார் வேண்டும் நாதா


 

யார் வேண்டும் நாதா நீரல்லவோ
எது வேண்டும் நாதா உம் அன்பல்லவோ
பாழாகும் லோகம் வேண்டாமையா
வீணான வாழ்க்கை வெறுத்தேனையா

1. உம்மோடல்லாது வாழ்வது ஏன்
உம் உள்ளம் மகிழாது வாழ்வது ஏன்
மனம் போன வாழ்க்கை  வாழ்க்கையல்ல
வாழ்வேனே என்றும் உமக்காக நான்

2. சிற்றின்ப மோகம் சீக்கிரம் போம்
பேரின்ப நாதா நீர் போதாதோ
யார் வேண்டும் என்று ஏன் கேட்டீரோ
எங்கே நான் போவேன் உம்மையல்லால்

3. உலகத்தின் செல்வம் நிலையாகுமோ
பேர் புகழ் கல்வி அழியாததோ
பின் ஏன் நீர் கேட்டீர் இக்கேள்வியை
பதில் என்ன சொல்வேன் நீரே போதும்

4. உற்றாரின் பாசம் உடன் வருமோ
மற்றோரின் நேசம் மாறாததோ
உம்மன்பின் நேசத்திற் கிணையாகுமோ
ஏனய்யா கேட்டீர் இக் கேள்வியை

5. என்னைத் தள்ளினால் நான் எங்கே போவேன்
அடைக்கலம் ஏது உம்மையல்லால்
கல்வாரி இன்றி கதியில்லையே
கர்த்தர் நின்பாதம் சரணடைந்தேன்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.