கர்த்தாதி கரத்தனை
இராஜாதி இராஜனை
நான் கெம்பீரித்து பாடுவேன்
நான் கெம்பீரித்து பாடுவேன்
ஆடுவேன் பாடுவேன் மகிழ்ந்திடுவேன்
அன்பரின் பாதத்தில் அமர்ந்திடுவேன் --- கர்த்தாதி
1. எனக்காக யாவற்றையும்
செய்து முடிப்பார் அவர்
கர்த்தரைத் தேடிடுவேன் என்றும்
எனக்கொன்றும் குறைவில்லையே --- ஆடுவேன்
2. கர்த்தரை நம்பிடுவேன்
சகலமும் நன்மையாகும்
வாக்குதத்தம் செய்தவர் அவர்
வாக்கொன்றும் மாறிடாரே --- ஆடுவேன்
3. கோழி தன் குஞ்சுகளை
கூட்டி அணைப்பது போல்
சேதம் வராமல் என்னை
அவர் செட்டையில் காத்திடுவார்
--- ஆடுவேன்
4. அழுகையின் பள்ளத்தாக்கை
நீரூற்றாய் மாற்றிடுவார்
திறந்த வாசல் ஒன்றை அவர்
எனக்காக வைத்திடுவார் --- ஆடுவேன்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.