அனுப்பும் தேவா உம் ஆவியினை
அடியார் மீதே இவ்வேளையிலே
பரிசுத்த ஆவி பலமாய் இறங்கி
பின்மாரி பெய்திடவே
1. சுட்டெரிக்கும்
தேவ அக்கினியே
சுத்திகரிக்கும் எம்மை
குற்றங் குறைகள் கறைகளை
முற்றும் நீக்கி சுத்தம் செய்ய
2. பெந்தேகோஸ்தே நாளில் சீஷர்கள் மேல்
பலத்த காற்றாய் வந்தீர்
பலவீனர் எம் உள்ளத்திலும்
தேவ பெலன் பெற்றிடவே
3. மீட்கப்படும் நல் நாளுக்கென்றே
பெற்ற உம் ஆவிதனை
துக்கப்படுத்தாது பாதுகாத்து
தூய வழியில் நடந்திட
4. சாத்தானின் கோட்டைகள் தகர்ந்திடவே
சத்தியம் சாற்றிடவே
புத்தியாய் நின்று யுத்தம் செய்ய
சக்தி ஈவீர் இந்நேரமே
5. இளைத்துப் போன உள்ளம் பெலனடைந்து
இடைவிடா சேவை செய்ய
இரட்சகர் இயேசுவின் சாட்சியாக
பாரில் எங்கும் ஜீவித்திட
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.