1. இளைப்பாறுதல் ஈந்திடும் நாடே
இன்ப இயேசுவின் மோட்ச வீடே
புவி யாத்திரை தீர்ந்திடும் போதே
பரலோகம் அழைத்திடுமே
எந்தன் வஞ்சை உயர் சீயோன்
என்னை வந்தவர் சேர்த்துக் கொள்வார்
கண்ணீர் யாவையுமே மிக அன்புடனே
கர்த்தர் தாமே துடைத்திடுவார்
2. இந்த மண்ணுலகாசை வெறுத்தேன்
இப்புவி எந்தன் சொந்தமல்ல
இன்பம் எண்ணம் மனம் எல்லாம் இயேசு
இலக்கை நோக்கித் தொடருகிறேன் - எந்தன்
3. நம் முன்னோர் பலர் அக்கரை மீதே
நமக்காகவே காத்திருக்க
விண்ணில் ஜீவ நதிக்கரை ஓரம்
வேகம் நானும் சேர்ந்து கொள்வேன் - எந்தன்
4. அற்பமான சரீரம் அழிந்தே
அடைவேன் மறு ரூபமாக
புதுராகம் குரல் தொனியோடே
புதுப்பாட்டு பாடிடுவேன் – எந்தன்
5. பரலோகத்தில் இயேசுவே அல்லால்
பரமானந்தம் வேறில்லையே
அங்கு சேர்ந்து அவர் முகம் காண்பேன்
ஆவல் தீர அணைத்துக் கொள்வேன் - எந்தன்
6. உண்மையாக உம் ஊழியம் செய்ய
உன்னத அழைப்பை ஈந்தீரே
தவறாமலே கர்த்தர் கரத்தில்
தருவேன்
என் ஆவியை நான் – எந்தன்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.