Thursday, 14 October 2021

Arasanai Kanamalirupomo அரசனைக் காணாமலிருப்போமோ


 

அரசனைக் காணாமலிருப்போமோ – நமது

ஆயுளை வீணாகக் கழிப்போமோ

 பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ – யூதர்

பாடனு பவங்களை ஒழிப்போமோ – யூத

                                 

1. யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே – இஸ்ரேல்

ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே

ஆக்கமிழந்து மறுவாக்குரைத்த பாலாம்

தீர்க்கன் மொழிபொய்யாத பாக்கியமே – யூத — அரசனை

 

2. தேசோ மயத்தாரகை தோன்றுது பார் – மேற்குத்

திசை வழி காட்டிமுன் செல்லுது பார்

பூசனைக் காண நன்கொடைகள் கொண்டே - அவர்

பொன்னடி வணங்குவோம் நடவுமின்றே – யூத — அரசனை

 

3. அலங்காரமனை யொன்று தோணுது பார் – அதன்

அழகு மனமுங் கண்ணும் கவர்ந்தது பார்

இளவர சங்கிருக்கும் நிச்சயம் பார் – நாம்

எடுத்த கருமம் சித்தியாகிடும் பார் – யூத — அரசனை

 

4. அரமனையில் அவரைக் காணோமே – அதை

அகன்று தென்மார்க்கமாய்த் திரும்புவமே

மறைந்த உடு அதோ பார் திரும்பினதே – பெத்லேம்

வாசலில் நமைக் கொண்டு சேர்க்குது பார் – யூத — அரசனை

 

5. பொன் தூபவர்க்கம் வெள்ளைப் போளமிட்டே – ராயர்

பொற்கழல் அர்ச்சனை புரிவோமே

வன்கண்ணன் ஏரோதைப் பாராமல் – தேவ

வாக்கினால் திரும்பினோம் சோராமல் – யூத — அரசனை

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.