Saturday, 9 October 2021

Naan Sellum Paathai நான் செல்லும் பாதை


 

நான்‌ செல்லும்‌ பாதை என்
 நேசர்‌ அறிவாரே
 நாசம்‌ அணுகாமல்‌ காப்பாரே

1. மரணப்‌ பள்ளத்தாக்கிலும்‌ நான்‌
வரும்‌ எத்‌தீமைக்கும்‌ அஞ்சேன்‌
கருத்தாய்க்‌ காத்திட வாக்குத்‌ தவறிடா
வல்ல ஓர்‌ தேவன்‌ உண்டெனக்கு   — நான்‌

2. கண்ணீரின்‌ பள்ளத்தாக்கல்லோ இது
தண்ணீரில்லாப்‌ பாலையன்றோ
கண்ணீரை மாற்றியே சந்தோஷம்‌ பொங்கிடும்‌
தணணீர்த்‌ தடாகமாய்‌ மாற்றுவார் ‌ — நான்‌

3. பாடுகள்‌ சகித்த இயேசு அவர்‌
நடந்த பாதை இதல்லோ
ஓடியே வீரனாம்‌ இயேசுவை நோக்கியே
பாடுவேன்‌ நம்பிக்கையுடனே   — நான்‌

4. மண்‌ வாழ்வின்‌ இன்பம்‌ வெறுத்தேன்‌  மேல்‌
விண்‌ வாழ்வின்‌ இன்பத்தைக்‌ கண்டே
துன்பங்கள்‌ மூலமாய்ச்‌ சுத்தரானோருடன்‌
பொன்‌ நகரம்‌ சேர்ந்து வாழுவேன்‌   — நான்‌

5. ஆதரவாய்‌ இடைகட்டி என்னை
ஆனந்தமாயோடச்‌ செய்தார்‌
ஆவி அச்சாரத்தால்‌ புத்திர சுவிகாரம்
ஆளுகையும்‌ அன்று பெறுவேன்‌   -- நான்‌

6. மங்கள கீதம்‌ முழங்க  சபை
எங்கும்‌ துதிகளைச்‌ சாற்ற
எங்களின்‌ மன்னவன்‌ மங்கிடா நீதியின்‌
செங்கோலும்‌ ஓங்குமே நித்தியமாய்‌   -- நான்‌

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.