கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது
கர்த்தரின் சத்தம் மகத்துவமுள்ளது
திரண்ட தண்ணீர்மேல் ஜலப்பிரவாகம் மேல்
தற்பரன் முழங்குகின்றார் அல்லேலூயா
1. பலவான்களின் புத்திரரே
பரிசுத்த அலங்காரமாய்
கனம் வல்லமை மகிமை
கர்த்தருக்கே செலுத்திடுங்கள்
பிதாகுமாரன் பரிசுத்தாவியின்
புது ஆசீர்வாதம் பெருக – கர்த்தரின்
2. கேதுரு மரங்களையும்
லீபனோனின் மரங்களையும்
கர்த்தரின் வலிய சத்தம்
கோரமாக முறிக்கின்றது
சேனை அதிபன் நமது முன்னிலை
ஜெய வீரனாகச் செல்கிறார் – கர்த்தரின்
3. அக்கினி ஜூவாலைகளை
அவர் சத்தம் பிளக்கின்றது
காதேஸ் வனாந்திரத்தை
கர்த்தர் சத்தம் அதிரப் பண்ணும்
ராஜாவாகவே கர்த்தர் வீற்றிருப்பார்
ராஜரீகமெங்கும் ஜொலிக்கும் – கர்த்தரின்
4. பெண்மான்கள் ஈனும்படி
பலத்த கிரியை செய்திடும்
காட்டையும் வெளியாக்கும்
கர்த்தரின் வலிய சத்தம்
பெலன் கொடுத்து சமாதானமீந்து
பரன் எம்மை ஆசீர்வதிப்பார் – கர்த்தரின்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.