1. ஆனந்தம் கொள்ளுவேன் அன்பர் இயேசுவிலே
எந்தன் பாவங்கள் போக்கியதால்
அற்புதர் இயேசுவை என்றும் துதித்திடுவோம்
எந்தன் ஜீவியம் மாற்றியதால்
நான் புகழ்ந்திடுவேன் அவர் நாமமதை
நன்றி நிறைந்த நல் இதயமுடன்
ஆயுட் காலமெல்லாம் துதி பாடிடுவேன்
நன்றி மறவா நல் மனதுடனே
2. இத்தனை அற்புத நன்மைகள் செய்தவர்
இன்னமும் என்னைக் காத்திடுவார்
அத்தனை நாட்களும் எம்மை நடத்திடவே
கர்த்தர் இயேசுவே முன் செல்கிறார் – நான்
3. சோர்ந்திடும் வேளைகள் எம்மைத் தேற்றிடவே
ஈந்தவர் தேவ ஆவி எம்மில்
நேர்ந்திடும் துன்ப துயரமாம் வேளைகளில்
நேசர் கிருபைகள் அளித்திடுவார் – நான்
4. கூப்பிடும் வேளைகள் நேசக் கொடி அசைத்தே
வேகமாய் வந்தே பதிலளித்தார்
தப்பிடும் வழிகள் எந்தன் ஆபத்தினில்
வேத வசனத்தால் நடத்திடுவார் – நான்
5. பற்பல சோதனை எம்மைச் சூழ்ந்திட்டதால்
நற்பலன் வாழ்வில் பரிசுத்தமே
சீயோனை எமக்காய் கட்டி வெளிப்படுவார்
சேர்வேன் தரிசிக்க தூய முகம் – நான்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.