Friday, 3 September 2021

Pilavunda Malaiyae Pugalidam பிளவுண்ட மலையே புகலிடம்


 

1. பிளவுண்ட மலையே

புகலிடம் ஈயுமே

பக்கம் பட்ட காயமும்

பாய்ந்த செந்நீர் வெள்ளமும்

பாவதோஷம் யாவையும்

நீக்கும்படி அருளும்.

 

2. எந்தக் கிரியை செய்துமே

உந்தன் நீதி கிட்டாதே

கண்ணீர் நித்தம் சொரிந்தும்

கஷ்ட தவம் புரிந்தும்

பாவம் நீங்க மாட்டாதே

நீரே மீட்பர் இயேசுவே.

 

3. யாதுமற்ற ஏழை நான்

 நாதியற்ற நீசன் தான்

உம் சிலுவை தஞ்சமே 

உந்தன் நீதி ஆடையே

தூய ஊற்றை அண்டினேன்

தூய்மையாக்கேல் மாளுவேன்.

 

4. நிழல் போன்ற வாழ்விலே

கண்ணை மூடும் சாவிலே

கண்ணுக்கெட்டா லோகத்தில் 

நடுத்தீர்வை தினத்தில்

பிளவுண்ட மலையே 

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.