1. சேனையின் கர்த்தா
சீர்நிறை யெகோவா
உம் வாசஸ்தலங்களே
எத்தனை இன்பம்
கர்த்தனே என்றும்
அவற்றை வாஞ்சித்திருப்பேன்
2. ராஜாதி ராஜா
சேனைகளின் கர்த்தா
உம் பீடம் என் வாஞ்சையே
உம் வீடடைந்தே
உம்மைத் துதித்தே
உறைவோர் பாக்கியவான்களே
3. சேனையின் கர்த்தா
சீர் பெருகும் நாதா
எம் கேடயமானோரே
விண்ணப்பம் கேளும்
கண்ணோக்கிப் பாரும்
எண்ணெய் வார்த்த உம் தாசனை
4. மன்னா நீர் சூரியன்
என் நற்கேடயமும்
மகிமை கிருபை ஈவீர்
உம் பக்தர் பேறு
நன்மை அநந்தம்
உம்மை நம்புவோன் பாக்கியவான்
5. திரியேக தேவே
மகிமை உமக்கே
வளமாய் உண்டாகவே
நித்தியம் ஆளும்
சதா காலமும்
உளதாம்படியே ஆமேன்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.