யோர்தான் நதியோரம் திகையாதே மனமே
யோசனை யாலுன்னைக் கலக்காதே உள்ளமே
1.வெள்ளம் பெருகினும் வல்லமைக் குன்றாதே
வல்லவர் வாக்கென்றும் மாறிப் போகாதே - யோர்
2.வைப்பாயுன் காலடி தற்பரன் சொற்படி
வானவர் இயேசு தம் வாக்கு மாறாரே - யோர்
3.உன்னத மன்னனே உண்டு முன்னணியில்
துன்பமணுகாமல் துணையருள்வாரே - யோர்
4.கானானினோரமே காதலின் நாடதே
காணுவேன் தேசம் ஆ என்ன இன்பமே - யோர்
5.பால்தேனு மோடுதே பூரண அன்பதே
பாட்டினாலே அதைப் பகரலாகாதே - யோர்
6.ஜெபத்தினால் வல்லமை ஜெயம் பெற்றோர் நாடதே
ஜோதியின் வஸ்திரம் தரித்திடலாமே - யோர்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.