துதி துதி என் மனமே
துதிகட்குள் வசிப்பவரை -- எல்லா
நாட்களும் செய்திடும் நன்மைகளை நினைத்து
நன்றியுடன் பாடு மனமே அல்லேலூயா (2) --- துதி
1.அன்னையை போல அவர்
என்னை அரவணைத் தாற்றிடுவார்
அவர் அன்புள்ள மார்பதனில்
நான் இன்பமாக இளைப்பாறுவேன் (2) --- துதி
2.கஷ்டங்கள் வந்திடவே
நல்ல கர்த்தராம் துணை அவரே
துஷ்ட எதிரிகள் நடுவிலவர்
நல்ல பந்தி ஆயத்தம் செய்வார் (2) --- துதி
3.பாரங்கள் அமிழ்த்தினாலும்
தீரா வியாதியால் கலங்கினாலும்
அவர் காயத்தின் தழும்புகளால்
வியாதி தனை விலக்கிடுவார் (2) --- துதி
4.சகாய பர்வதமே
வல்ல கோட்டையும் அரணுமாமே
ஏதும் பயமொன்றும் வேண்டாமென்றால்
எந்த சேதமின்றி காக்கவல்லோன்(2) --- துதி
5.சிங்கமோ விரியன் பாம்போ
பால சிங்கமோ வலு சர்ப்பமோ
அதன் தலையதை நசுக்கிடவே
தக்க பலம் தருபவரே (2)--- துதி
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.