Sunday, 17 November 2019

Kaalai Thorum Karthane Puthu காலை தோறும் கர்த்தனேபுது

Kalai Thorum Karthane Puthu
காலை தோறும் கர்த்தனே-புது
கிருபையை தினம் பொழிகின்றீரே
காலை தோறும் கர்த்தனே

நம் தேவன் நல்லவரே
மாதேவன் வல்லவரே
உம் சமூகம் எனக்கானந்தமே  (2)   --- காலை

1. ஆழியின் அலைகள் ஓயாதுபோல்
அன்பின் அலைகள் எழும்புமே
மலைகள் விலகும் பர்வதம் அகலும்
மாறா உம் கிருபை நீங்கிடாதே --- காலை

2. ஆதி அதிசயம் அற்புதங்கள்
வல்லமை நானும் கண்டிடவே
மகிமையின் சாயல் அணிந்து நானும்
மனதில் மறுரூபமாகிடுவேன் --- காலை

3. சபையின் நடுவில் வல்லமை விளங்க
சந்ததம் ஓங்கும் புகழ் நிற்க
சர்வ வல்லவரே உம் அன்பின் மார்பில்
சாய்ந்திடுவேன் நான் என்றென்றுமாய் --- காலை

4. கனிமரமாய் நான் செழித்திடவே
கர்த்தரே உமது பெலன் தாரும்
காலா காலத்தில் பலனைக் கொடுக்க
கண்மணி போல் என்னைக் காத்திடுவீர் --- காலை

5. ஜாதிகள் நடுவே உம் ஜனமே
கலங்கரை விளக்காய் திகழவே
எரியும் தீபங்கள் தொடர்ந்து எரிய
அக்கினி ஆவி ஊற்றிடுவீர் --- காலை

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.