Friday, 8 November 2019

Potruvomae Potruvomae போற்றுவோமே போற்றுவோமே

போற்றுவோமே போற்றுவோமே
எம் தேவரீரை இவ்வேளையிலே நன்றியுடனே (2) போற்றுவோமே

1.துங்கன் இயேசுவே துயா உமக்கே
துதிகள் சாற்றிடுவேன்
மங்கா புகழும் மகிழ்ந்து போற்றி
எங்கும் துதித்திடுவேன்
கங்குல் அற எங்குமே ஒளி
மங்கிடாமலே தங்கிடவேணும் --- போற்றுவோமே

2.ஆழ்ந்த சேற்றினில் அமிழ்ந்த எம்மையே
அணைத்து எடுத்தோனே
ஆழிதனிலெம் பாவ மெறிந்த
அன்னை உத்தமனே
அன்றும் இன்றும் என்றும் துதிப்பேன்
மன்னவனையே மனதினிலே --- போற்றுவோமே

3.பாவம் போக்கியே கோபம் மாற்றியே
ரோகம் தொலைத்தோனே
துரோகி என்னையே
சுத்திகரித்த துய வேந்தனே
துயா நேயா காயமாற்றியே
கருணாநிதியே பரிகாரியே --- போற்றுவோமே

4.பாரிலென்னையே பிரித்தெடுத்தோனே
தாவி வந்தோனே
அகமதினிலே ஆவி ஈந்திட
அருள் நிறைந்தவனே
தரி சனம் தந்த தேவனே
பரிசுத்தமாய் பாரில் ஜீவிக்க --- போற்றுவோமே

5.பூரணர் ஆகவே பூவில் வாழ்ந்திடக்
கிருபை அளித்தோனே
புகழை விரும்பேன் மகிழ்வேன் தினமே
மகிமை செலுத்திடுவேன்
கோனே தேனே கோதில்லாதோனே
 கானம் பாடியே துதித்திடுவேன் --- போற்றுவோமே

1 comment:

Note: only a member of this blog may post a comment.