Monday, 25 November 2019

Sathiyamum Jeevanumai Nithamume சத்தியமும் ஜீவனுமாய் நித்தமுமே

Sathiyamum Jeevanumai Nithamume
1.சத்தியமும் ஜீவனுமாய் நித்தமுமே வாழ்ந்திடும்
கர்த்தனே எங்கட்கு கரம் தந்து என்றும் தாங்கிடும்
சுத்தமாய் நடப்பதற்கும் சுத்த ஆவி தந்திடும்
சித்தமோடு இந்த வேளை வந்திறங்கிடும்

வானந்திறந்தருளும் பல தானங்களையிந் நேரமதில்
வானவனே ஞானமுள்ள வல்ல குரு நாதனே
தேனிலும் மதுரம் திவ்ய ஆசீர்வாதங்கள்

2.என்னை முற்றும் மாற்றிட உன்னத பெலனூற்றிடும்
இன்னும் இன்னும் ஈசனேயும் நல்வரங்கள் ஈந்திடும்
கண்ணிகளிற் சிக்கிடாமற் கண்மணி போல் காத்திடும்
கன்மலையும் மீட்பருமென் காவலும் நீரே        - வானந்

3.சுய ஆடம்பரம் முற்றும் சுட்டெரிக்க வேணுமே
தயவு தாழ்மையினாவி தந்தருள வேணுமே
மாயமான யாவினின்றும் மனமதைப் பேணுமே
ஆயனே அடியார்களின் அடைக்கலமே        - வானந்

4.அதிகமதிக அன்பில் அமிழ்ந்து அனுதினம்
புதிய நாவுகளாலும் புகழ்ந்தும்மைப் போற்றிட
அதிசயமே அகத்தின் குறைகளகற்றியே
இது சமயமுன்னத பெலனீந்திடும்            - வானந்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.