Kolgatha Malai Meethilae கொல்கதா மலை மீதிலே
Kolgatha Malai Meethilae
கொல்கதா மலை மீதிலே
சிலுவை சுமந்தேகினார்
உன்னத பிதாவின் சித்தமாய்
உத்தமர் இரத்தம் சிந்தினார்
1. அந்தோ எருசலேமே
ஆண்டவர் பவனி வந்தார்
அந்த நாளை நீ மறந்தாய்
அன்பரோ கண்ணீர் சிந்தினார்
2. மேனியில் கசையடிகள்
எத்தனை வசை மொழிகள்
அத்தனையும் அவர் உனக்காய்
அன்புடன் சுமந்து சகித்தார்
3. உத்தம தேவ மைந்தனே
சுத்தமாய் ரத்தம் சிந்தியே
நித்திய வாழ்வு தனையே
நீசனாம் எனக்களித்தார்
4. செந்நீரோ கண்ணீராய் மாறி
தரணியில் பாய்ந்ததங்கே
உன்நிலை நினைத்தவரே
தன்நிலை மறந்து சகித்தார்
5. வஞ்சக உலகினிலே
வணங்கா கழுத்துடனே
வழிபோகும் ஆத்துமாவே
வந்திடு நீ இயேசுவண்டை
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.