Kalvari Anbai Ennidum கல்வாரி அன்பை எண்ணிடும்
Kalvari Anbai Ennidum
கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
கண்கள் கலங்கிடுதே
கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்
நெஞ்சம் நெகிழ்ந்திடுதே
1. கெத்சமனே பூங்காவிலே
கதறி அழும் ஓசை
எத்திசையும் தொனிக்கிறதே
எங்கள் மனம் திகைக்கின்றதே
கண்கள் கலங்கிடுதே (2) – கல்வாரி
2. சிலுவையில் மாட்டி வதைத்தனரோ
உம்மை செந்நிறம் ஆக்கினரோ
அப்போதும் அவர்காய் வேண்டினீரே
அன்போடு அவர்களை கண்டீரன்றோ
அப்பா உம் மனம் பெரிதே (2) – கல்வாரி
3. எம்மையும் உம்மைபோல் மாற்றிடவே
உம் ஜீவன் தந்தீரன்றோ
என் தலை தரைமட்டும் தாழ்த்துகின்றேன்
தந்து விட்டேன் அன்பின் கரங்களிலே
ஏற்று என்றும் நடத்தும் (2) – கல்வாரி
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.