Friday, 13 March 2020

Kurusinil Thongiye குருசினில் தொங்கியே

Kurusinil Thongiye குருசினில் தொங்கியே குருதியும் வடிய கொல்கதா மலைதனிலே – நம் குருவேசு சுவாமி கொடுந் துயர் பாவி கொள்ளாய் கண் கொண்டு 1. சிரசினில் முள்முடி உறுத்திட அறைந்தே சிலுவையில் சேர்த்ததையோ – தீயர் திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார் சேனைத்திரள் சூழ – குருசினில் 2. பாதகர் நடுவில் பாவியினேசன் பாதகன் போல் தொங்க – யூத பாதகர் பரிகாசங்கள் பண்ணிப் படுத்திய கொடுமைதனை – குருசினில் 3. சந்திர சூரிய சகல வான் சேனைகள் சகியாமல் நாணுதையோ – தேவ சுந்தர மைந்த னுயிர் விடுகாட்சியால் துடிக்கா நெஞ்சுண்டோ – குருசினில் 4. ஈட்டியால் சேவகன் எட்டியே குத்த இறைவன் விலாவதிலே – அவர் தீட்டிய தீட்சைக் குருதியும் ஜலமும் திறந்தூற்றோடுது பார் – குருசினில் 5. எருசலேம் மாதே மறுகி நீயழுது ஏங்கிப் புலம்பலையோ – நின் எருசலையதிபன் இள மணவாளன் எடுத்த கோல மிதோ – குருசினில்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.