Monday, 30 March 2020

Meetpar Yesu Kurusil மீட்பர் இயேசு குருசில்

Meetpar Yesu Kurusil மீட்பர் இயேசு குருசில் தொங்கினாரே மூன்றாணி மீதில் காயம் அடைந்தே (2) 1. லோகப் பாவம் தீர்க்க பலியான தேவ ஆட்டுக் குட்டியானவர் சொந்தமான இரத்தம் சிந்தி மீட்டு இந்தளவாய் அன்பு கூர்ந்தவர் -எம்மில் 2. இயேசுவே கல்வாரி சிலுவையில் ஏறி ஜீவன் தந்திராவிடில் ஏழையான் என் பாவ பாரங்களை எங்கு சென்று தீர்த்துக் கொள்ளுவேன் – பூவில் 3. தேவனே என்னை ஏன் கைவிட்டீரோ என்று இயேசு கதறினாரே பாவத்தால் பிதாவின் முகத்தையும் பார்க்கவும் முடியவில்லையோ – அவர் 4. அன்னை தந்தை யாவரிலும் மேலாய் அன்பு கூர்ந்தார் அண்ணல் இயேசுவே ஆச்சரிய தேவ அன்பைப் பாட – ஆயிரம் நாவுகள் போதுமோ – பதினாயிரம் 5. பாவ பாரம் லோகக் கவலைகள் தாவி உன்னைச் சூழ்ந்த போதிலும் தேடி நாடி ஓடி வந்தால் உன்னைத் தேற்றி ஆற்றித் தாங்குவார் அவர் – உன்னை 6. கோரமாம் சிலுவைக் காட்சி கண்டால் கல் மனமும் உருகிடுமே மாய லோக ஆசை வஞ்சிக்குமே மாறிடாத இயேசு போதுமே – என்றும்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.