Siluvaiyil Araiyunda Yesuve
1. சிலுவையில் அறையுண்ட இயேசுவேஉம்மையே நோக்கி பார்க்கிறேன் என் பாவ சுமைகளோடு உம் பாத நிழலில் நிற்கிறேன் இயேசுவே உமது இரத்தத்தால் என்னை கழுவி இன்றே உம்முடன் வான்வீட்டில் என்னையும் சேருமே 2. தந்தையே இவர்களை மன்னியும் அறியாமல் செய்தார்கள் என்றீர் மாறாத இரக்கத்தால் என்னை மன்னித்து மகிழ்ச்சியால் நிரப்புமே --- இயேசுவே 3. அம்மா இதோ உன் மகன் என்றீர்இதோ உன் தாய் என்றே நேசத்தால் அன்னையின் அன்பினில் நாளுமே என்னையும் வாழ்ந்திட செய்யுமே ---இயேசுவே 4. தாகமாய் உள்ளதே இறைவா ஏன் என்னை கை விட்டீர் என்றீரே கைவிடா நேசத்தால் எனக்கும் தாகம் மாற்றும் ஜீவநீரை தாருமே --- இயேசுவே 5. தந்தையே உமது கையில் என் ஆவியை ஒப்படைக்கின்றேன் என்னையும் உமது கரத்தில் முற்றிலும் கையளிக்கின்றேன் --- இயேசுவே
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.