Thuthikintrom Thuthi Padal Padi துதிக்கின்றோம் துதி பாடல் பாடி
Thuthikintrom Thuthi Padal Padi
துதிக்கின்றோம் துதி பாடல் பாடி
தூயாதி தூயவரை
கோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரமே எந்நாளும் துதி துதியே
1. கோட்டையும் குப்பை மேடாகுமே
துதிக்கின்ற வேளையிலே
எரிகோ போன்ற சூழ்நிலையும் (2)
மாறிடும் துதிக்கும்போது
2. சேனைகள் சிதறியே ஓடிடுமே
துதிக்கின்ற வேளையிலே
யோசபாத்தின் சூழ்நிலையும் (2)
மாறிடும் துதிக்கும் போது
3. சிறைச்சாலை கதவுகள் திறந்திடுமே
துதிக்கின்ற வேளையிலே
கடுமையான சூழ்நிலையும் (2)
மாறிடும் துதிக்கும்போது
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.