Aayiram Varuda Arasatchiyae ஆயிரம் வருட அரசாட்சியே
Aayiram Varuda Arasatchiyae
ஆயிரம் வருட அரசாட்சியே
பரிசுத்தவான்களின் இராஜ்ஜியமே
பரமபிதா வேதவாக்கிதே
பசுமை பொற்காலம் வருகின்றதே --- ஆயிரம்
1. பசுவும் கரடியும் கூடி மேயுமே
புலியும் வெள்ளாடும் படுத்திருக்கும்
ஒருமித்து நடக்கும் காளையும் சிங்கமும்
ஒரு சிறு பையனே நடத்திடுவான் --- ஆயிரம்
2. இடுக்கண்கள் தீங்கு இழைப்பாரில்லை
இகத்தில் கர்த்தாவின் மகிமை தங்கும்
குழந்தையின் கரங்கள் பாம்பின் மண்புதரில்
களங்கம் பயமின்றி விளையாடுமே --- ஆயிரம்
3. வறண்ட நிலங்களும் செழித்தோங்குமே
விருட்சங்கள் இனிய கனி தருமே
அமைதியும் நிலவும் சுகவாழ்வு துளிர்க்கும்
அற்பாயுசுள்ளோர்கள் அதில் இல்லையே --- ஆயிரம்
4. கிறிஸ்தேசு ராஜா புவியாளுவார்
கிடைக்கும் நல்நீதி எளியவர்க்கே
பரிபூர்ணம் அடைந்த மெய் தூய பக்தர்கள்
பரனோடு நீடுழி அரசாளவே --- ஆயிரம்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.