Wednesday, 29 January 2020

Kartharaiye Thuthipaen கர்த்தரையே துதிப்பேன்

Kartharaiye Thuthipaen கர்த்தரையே துதிப்பேன் காலமெல்லாம் துதிப்பேன் வல்லவர் நல்லவர் கிருபையுள்ளவர் என்றே பாடுவேன் – நான் 1. நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி கதறி கூப்பிட்டேன் நெருங்கி வந்து குரலைக் கேட்டு விடுதலை கொடுத்தார் --- கர்த்தரையே 2. எனக்குதவும் கர்த்தர் எனது நடுவில் இருக்கிறார் எதிரியான அலகையை நான் எதிர்த்து வென்றிடுவேன்--- கர்த்தரையே 3. எனது பெலனும் எனது மீட்பும் கீதமுமானார் நம்பியிருக்கும் கேடயமும் கோட்டையுமானார்--- கர்த்தரையே 4. கர்த்தர் எனது பக்கம் இருக்க எதற்கும் பயமில்லை கடுகளவு பாவம் என்னை அணுக முடியாது --- கர்த்தரையே 5.வல்லமை மிக்கவர் செயல்கள் பல எனக்குச் செய்தாரே உயிரோடிருந்து உலகத்திற்கு எடுத்துச் சொல்லுவேன் --- கர்த்தரையே 6.வீடு கட்டுவோர் புறக்கணித்தது மூலைக் கல்லாயிற்று கர்த்தரே செய்தார் கண்களுக்கெல்லாம் ஆச்சரியம் இது --- கர்த்தரையே

Tuesday, 28 January 2020

Potruvom Devanai போற்றுவோம் தேவனை

Potruvom Devanai போற்றுவோம் தேவனை இன்றும் என்றுமாய் (2) ஆவியுடன் உண்மையுடன் ஆராதிப்போம் இயேசுவை 1. சென்ற நாளினில் சுகமுடன் காத்த தேவனை ஸ்தோத்திரிப்போம் (2) தந்தேன் எந்தனை வந்தேன் பாதமே என்றும் சொந்தமாய் 2. தேவ ஜனத்தின் ஆகாரமாம் மன்னா புசித்து ஜீவித்தாரே (2) என்றும் ஜீவித்திட கர்த்தர் இயேசுவில் என்றும் வளருவோம் 3. தேவ கிருபை தங்கிடவே தேவ தேவனை ஆராதிப்போம் (2) உள்ளம் நொறுங்கியே உண்மை மனதுடன் என்றும் தொழுகுவோம் 4. தேவ ஆலயம் மகிமையால் நிரம்பி தங்கிட ஆராதிப்போம் (2) துதி பலியுடன் போற்றி புகழ்ந்துமே சாற்றி ஆராதிப்போம்

Avar Arputhamanavare அவர் அற்புதமானவரே

Avar Arputhamanavare 1. அவர் அற்புதமானவரே – 2 எனை மீட்டென்னைக் காத்தென்னைத் தாங்குகிறார் அவர் அற்புதமானவரே 2. அவர் உன்னதர் என்றனரே – 2 விண் சூரிய சந்திர நட்சத்திரங்கள் அவர் உன்னதர் என்றனரே – அவர் 3. அவர் அற்புதமானவரே – 2 அவர் சிங்கத்தின் வாயைக் கட்டினாரே அவர் அற்புதமானவரே – அவர் 4. அவர் உன்னதர் என்றனரே – 2 அவர் காற்றையும் கடலையும் அதட்டினாரே அவர் உன்னதர் என்றனரே – அவர்

Wednesday, 22 January 2020

Aayiram Varuda Arasatchiyae ஆயிரம் வருட அரசாட்சியே

Aayiram Varuda Arasatchiyae ஆயிரம் வருட அரசாட்சியே பரிசுத்தவான்களின் இராஜ்ஜியமே பரமபிதா வேதவாக்கிதே பசுமை பொற்காலம் வருகின்றதே --- ஆயிரம் 1. பசுவும் கரடியும் கூடி மேயுமே புலியும் வெள்ளாடும் படுத்திருக்கும் ஒருமித்து நடக்கும் காளையும் சிங்கமும் ஒரு சிறு பையனே நடத்திடுவான் --- ஆயிரம் 2. இடுக்கண்கள் தீங்கு இழைப்பாரில்லை இகத்தில் கர்த்தாவின் மகிமை தங்கும் குழந்தையின் கரங்கள் பாம்பின் மண்புதரில் களங்கம் பயமின்றி விளையாடுமே --- ஆயிரம் 3. வறண்ட நிலங்களும் செழித்தோங்குமே விருட்சங்கள் இனிய கனி தருமே அமைதியும் நிலவும் சுகவாழ்வு துளிர்க்கும் அற்பாயுசுள்ளோர்கள் அதில் இல்லையே --- ஆயிரம் 4. கிறிஸ்தேசு ராஜா புவியாளுவார் கிடைக்கும் நல்நீதி எளியவர்க்கே பரிபூர்ணம் அடைந்த மெய் தூய பக்தர்கள் பரனோடு நீடுழி அரசாளவே --- ஆயிரம்

Sunday, 19 January 2020

Nam Devanai Thuthithu Paadi நம் தேவனைத் துதித்துப் பாடி

Nam Devanai Thuthithu Paadi நம் தேவனைத் துதித்துப் பாடி அவர் நாமம் போற்றுவோம் களிகூர்ந்திடுவோம் அகமகிழ்ந்திடுவோம் துதி சாற்றிடுவோம் புகழ் பாடிடுவோம் அவர் நாமம் போற்றுவோம் 1. நம் பாவம் யாவும் நீக்கி மீட்டார் அவர் நாமம் போற்றுவோம் துன் மார்க்க வாழ்வை முற்றும் நீக்கி அவர் நாமம் போற்றுவோம் – களி கூர் 2. மெய் ஜீவ பாதைதனில் சென்று அவர் நாமம் போற்றுவோம் நல் ஆவியின் கனிகள் ஈந்து அவர் நாமம் போற்றுவோம் – களி கூர் 3. மேலோக தூதர் கீதம் பாடி அவர் நாமம் போற்றுவோம் பேரின்ப நாடுதனில் வாழ அவர் நாமம் போற்றுவோம் – களி கூர்

En Nenjame Nee Motchathai என் நெஞ்சமே நீ மோட்சத்தை

En Nenjame Nee Motchathai 1.என் நெஞ்சமே நீ மோட்சத்தை விரும்பித் தேடி கர்த்தரை வணக்கத்துடனே துதித்துப் பாடி, என்றைக்கும் புகழ்ந்து போற்று நித்தமும் மகிழ்ச்சியாகவே. 2. நட்சத்திரங்கள், சந்திரன் வெம் காந்தி வீசும் சூரியன் ஆகாச சேனைகள், மின், மேகம், காற்று மாரியே வானங்களின் வானங்களே ஒன்றாகப் பாடுங்கள். 3. விஸ்தாரமான பூமியே நீயும் எழுந்து வாழ்த்தல் செய் யெகோவா நல்லவர் சராசரங்கள் அனைத்தும் அவர் சொற்படி நடக்கும் அவரே ஆண்டவர். 4. பரத்திலுள்ள சேனையே புவியிலுள்ள மாந்தரே வணங்க வாருங்கள் யெகோவாதாம் தயாபரர் எல்லாவற்றிற்கும் காரணர் அவரைப் போற்றுங்கள்

Saturday, 18 January 2020

Karthavin Janame Kaithalamudane கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே

Karthavin Janame Kaithalamudane கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே களிகூர்ந்து கீதம் பாடு சாலேமின் ராஜா நம் சொந்தமானார் சங்கீதம் பாடி ஆடு அல்லேலூயா அல்லேலூயா (2) சரணங்கள் 1. பாவத்தின் சுமையகற்றி — கொடும் பாதாள வழி விலக்கி பரிவாக நம்மைக் கரம் நீட்டிக் காத்த பரிசுத்த தேவன் அவரே அல்லேலூயா (2) — கர்த்தாவின் 2. நீதியின் பாதையிலே — அவர் நிதம் நம்மை நடத்துகின்றார் எது வந்த போதும் மாறாத இன்ப புது வாழ்வைத் தருகின்றாரே அல்லேலூயா (2) — கர்த்தாவின் 3. மறுமையின் வாழ்வினிலே — இயேசு மன்னவன் பாதத்திலே பசிதாகமின்றி துதி கானம் பாடி பரனோடு நிதம் வாழுவோம் அல்லேலூயா (2) — கர்த்தாவின்

Friday, 17 January 2020

Thuthikintrom Thuthi Padal Padi துதிக்கின்றோம் துதி பாடல் பாடி

Thuthikintrom Thuthi Padal Padi துதிக்கின்றோம் துதி பாடல் பாடி தூயாதி தூயவரை கோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே எந்நாளும் துதி துதியே 1. கோட்டையும் குப்பை மேடாகுமே துதிக்கின்ற வேளையிலே எரிகோ போன்ற சூழ்நிலையும் (2) மாறிடும் துதிக்கும்போது 2. சேனைகள் சிதறியே ஓடிடுமே துதிக்கின்ற வேளையிலே யோசபாத்தின் சூழ்நிலையும் (2) மாறிடும் துதிக்கும் போது 3. சிறைச்சாலை கதவுகள் திறந்திடுமே துதிக்கின்ற வேளையிலே கடுமையான சூழ்நிலையும் (2) மாறிடும் துதிக்கும்போது

Thursday, 16 January 2020

Yesu Enaku Jeevan இயேசு எனக்கு ஜீவன்

Yesu Enaku Jeevan இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே (2) துதி பாடல் நான் பாடி இயேசுவையே போற்றி என்றென்றும் வாழ்த்திடுவேன்
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா (4) சமாதானம் தந்தார் இயேசு (4) --- துதி புது வாழ்வு தந்தார் இயேசு (4) --- துதி விடுதலை தந்தார் இயேசு (4) --- துதி வல்லமை தந்தார் இயேசு (4) --- துதி அபிஷேகம் தந்தார் இயேசு (4) --- துதி

Thuthi Thuthi Yesuvai துதி துதி இயேசுவை

Thuthi Thuthi Yesuvai துதி துதி இயேசுவை துதி துதி துதிகளின் தேவனை துதி துதி (2) சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் சேனைகளின் கர்த்தர் வல்ல மீட்பர் சேனைகளின் கர்த்தர் மகாராஜா அந்த ராஜாவுக்கு பிள்ளை நீ துதி துதி 1. பாவங்களை மன்னித்தாரே துதி துதி சாபங்களை தள்ளினாரே துதி துதி ரோகங்களை தீர்த்தவரை துதி துதி இனிய ராகங்களை தந்தார் பாடி துதி துதி --- சேனைகளின் 2. சோதனையில் தாங்கினாரே துதி துதி வேதனையில் தேற்றினாரே துதி துதி வியாதியிலே வைத்தியராம் துதி துதி உந்தன் வியாகுலத்தில் தேற்றுவாரே துதி துதி --- சேனைகளின் 3. காலை மாலை எப்பொழுதும் துதி துதி எந்த காலத்திலும் நேரத்திலும் துதி துதி ஜீவனை கொடுத்தவரை துதி துதி என்றும் ஜீவனோடிருப்பவரை துதி துதி --- சேனைகளின்

Wednesday, 15 January 2020

En Yesu Rajavukae என் இயேசு ராஜாவுக்கே

En Yesu Rajavukae என் இயேசு ராஜாவுக்கே எந்நாளும் ஸ்தோத்திரம் என்னோடு வாழ்பவர்க்கே எந்நாளும் ஸ்தோத்திரம் 1. கர்த்தாவே நீர் செய்த நன்மைகளை நித்தமும் நினைக்கிறேன் முழு உள்ளத்தோடு உம் நாமம் பாடிப் புகழுவேன் --- என் இயேசு 2. நெருக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன் நேசர் நீர் அணைத்தீரே கைவிடப்பட்டு கதறினேன் கர்த்தர் நீர் தேற்றினீர் --- என் இயேசு 3. இனி நான் வாழ்வது உமக்காக உமது மகிமைக்காக உம் அன்பை எடுத்துச் சொல்லுவேன் ஓயாமல் பாடுவேன் --- என் இயேசு 4. பாவங்கள் அனைத்தும் மன்னித்தீரே நோய்களை சுகமாக்கினீர் எனது ஜீவனை அழிவில் நின்று காத்து இரட்சித்தீரே --- என் இயேசு

Tuesday, 14 January 2020

Eppadi Paduven Naan எப்படி பாடுவேன் நான்

Eppadi Paduven Naan எப்படி பாடுவேன் நான் – என் இயேசு எனக்குச் செய்ததை ஆயுள் முழுவதும் என் கர்த்தருக்காய் ஆத்தும ஆதாயம் செய்வேன் 1. ஒரு வழி அடையும் போது புதுவழி திறந்த தேவா திறந்த வாசலை என் வாழ்க்கையில் (2) அடைக்காத ஆண்டவரல்லோ (2) 2. எப்பக்கம் நெருக்கப்பட்டும் ஒடுங்கி நான் போவதில்லை அப்பனின் மார்பினில் சாய்ந்தென்றுமே (2) எப்போதும் பாடிடுவேன் (2) 3. கடந்து வந்த பாதையில் கண்மணி போல் காத்திட்டீர் கடுகளவும் குறை வைக்காமலே (2) அதிகமாய் ஆசிர்வதித்தீர் (2)

Um Patham panithen உம் பாதம் பணிந்தேன்

Um Patham panithen உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே உம்மையன்றி யாரைப்பாடுவேன் – ஏசையா உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே சரணங்கள் 1. பரிசுத்தமே பரவசமே பரனேசருளே வரம் பொருளே தேடினதால் கண்டடைந்தேன் பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர் — உம்பாதம் 2. புது எண்ணெய்யால் புது பெலத்தால் புதிய கிருபை புது கவியால் நிரப்பி நிதம் நடத்துகின்றீர் நூதன சாலேமில் சேர்த்திடுவீர் — உம்பாதம் 3. நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் நெருங்கி உதவி எனக்களித்தீர் திசைக் கெட்டெங்கும் அலைந்திடாமல் தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர் — உம்பாதம் 4. என் முன் செல்லும் உம் சமூகம் எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல் உமது கோலும் உம் தடியும் உண்மையாய் என்னையும் தேற்றிடுதே — உம்பாதம் 5. கனிசெடி நீர் நிலைத்திருக்கும் கொடியாய் அடியேன் படர்ந்திலங்க கிளை நறுக்கிக் களை பிடுங்கி கர்த்தரே காத்தென்னை சுத்தம் செய்தீர் — உம்பாதம் 6. என் இதய தெய்வமே நீர் எனது இறைவா ஆருயிரே நேசிக்கிறேன் இயேசுவே உம் நேசமுகம் என்று கண்டிடுவேன் — உம்பாதம் 7. சீருடனே பேருடனே சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில் சீக்கிரமாய் சேர்த்திடுவீர் சீயோனை வாஞ்சித்து நாடிடுவேன் — உம்பாதம்

Monday, 13 January 2020

Melogathai Nadukirom மேலோகத்தை நாடுகிறோம்

Melogathai Nadukirom 1. மேலோகத்தை நாடுகிறோம் அதின் ஜோதிப் பிரகாசத்தையும் பேரின்பமாம் இன்பக் கடல் பார்த்தால் என்னமாயிருக்கும் பார்த்தால் பார்த்தால் பார்த்தால் என்னமாயிருக்கும் பேரின்பமாம் இன்பக் கடல் பார்த்தால் என்னமாயிருக்கும் 2. நம் மீட்பரின் வாசஸ்தலம் அவர் ரத்தத்தால் மீட்கப்பட்டோர் மேலோகத்தை நாடிடுவார் பார்த்தால் என்னமாயிருக்கும் 3. திரியேக தேவனை தாம் நாம் நேரில் கண்டானந்திப்போம் பாவம் சாபம் நீங்கலாகி பார்த்தால் என்னமாயிருக்கும்

Sunday, 12 January 2020

Yesu Entra Thiru Namathirku இயேசு என்ற திருநாமத்திற்கு

Yesu Entra Thiru Namathirku இயேசு என்ற திருநாமத்திற்கு எப்போதுமே மிக ஸ்தோத்திரம் 1. வானிலும் பூவிலும் மேலான நாமம் வல்லமையுள்ள நாமமது தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது – இயேசு 2. வேதாளம் பாதாளம் யாவையும் ஜெயித்த வீரமுள்ள திரு நாமமது நாமும் வென்றிடுவோம் இந்த நாமத்திலே – இயேசு 3. பாவத்திலே மாளும் பாவியை மீட்கப் பாரினில் வந்த மெய் நாமமது பரலோகத்தில் சேர்க்கும் நாமமது – இயேசு 4. உத்தம பக்தர்கள் போற்றித்துதித்திடும் உன்னத தேவனின் நாமமது உலகெங்கும் ஜொலித்திடும் நாமமது – இயேசு 5. சஞ்சலம் வருத்தம் சோதனை நேரத்தில் தாங்கி நடத்திடும் நாமமது தடைமுற்று மகற்றிடும் நாமமது – இயேசு

Inba Yesuvaiye Thinam Thuthithiduven இன்ப யேசுவையே தினம் துதித்திடுவேன்

Inba Yesuvaiye Thinam இன்ப யேசுவையே தினம் துதித்திடுவேன் புகழ் பாடி மகிழ்ந்திடுவேன் இனிமை சுகமே அளித்தோர் அவரை பண்பாடி வாழ்த்திடுவேன் (2) --- இன்ப 1. கோரத்தின் எல்லைப் புயலினில் பேரலை வீசும் கடலினில் மாளும் பாவி என்னைத் தூக்கி தோளில் தாங்கி கரை சேர்த்தார் மகிபன் அருளின் வடிவாம் அவரை மகிழ்வாய் பாடுகிறேன் --- இன்ப 2. மாந்தர் கைவிட்ட வேளைதனில் மாமன்னன் யேசு சேர்த்துக் கொண்டார் ஜீவ ரத்த மதால் மீட்டார் தூய வாழ்வு தனைத் தந்தார் மகவாய் எடுத்தே அணைத்தார் கரத்தில் மகிழ்வாய் பாடுகிறேன் --- இன்ப 3. வானக வேந்தன் என்றென்றுமே வாழ்ந்திடத் தந்தேன் என்னுள்ளமே வான தூதர் போல நானும் வாழ்வு காண வாக்குத் தந்தார் வருவார் அழைப்பார் வானகம் செல்லுவேன் வல்லோனை வாழ்த்திடுவேன் --- இன்ப

Friday, 10 January 2020

Aandavar Padaitha Vetriyin Naalithu ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது

Aandavar Padaitha Vetriyin Naalithu ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது இன்று அகமகிழ்வோம் அக்களிப்போம் அல்லேலூயா பாடுவோம் அல்லேலூயா தோல்வி இல்லை அல்லேலூயா வெற்றி உண்டு 1. எனக்கு உதவிடும் எனது ஆண்டவர் என் பக்கம் இருக்கிறார் – 2 உலக மனிதர்கள் எனக்கு எதிராக என்ன செய்ய முடியும் – 2 தோல்வி இல்லை எனக்கு வெற்றி பவனி செல்வேன் தோல்வி இல்லை நமக்கு வெற்றி பவனி செல்வோம் 2. எனது ஆற்றுலும் எனது பாடலும் எனது மீட்புமானார் – 2 நீதிமான்களின் சபைகளிலே வெற்றி குரல் ஒலிக்கட்டும் – 2 – தோல்வி 3. தள்ளப்பட்ட கல் கட்டிடம் தாங்கிடும் மூலைக்கல்லாயிற்று – 2 கர்த்தர் செயல் இது அதிசயம் இது கைத்தட்டிப் பாடுங்களேன் – 2 – தோல்வி 4. என்றுமுள்ளது உமது பேரன்பு என்று பறை சாற்றுவேன் – 2 துன்பவேளையில் நோக்கிக் கூப்பிட்டேன் துணையாய் வந்தீரய்யா – 2 – தோல்வி

Arputhar Arputhar Arputhar அற்புதர் அற்புதர் அற்புதர்

Arputhar Arputhar Arputhar அற்புதர், அற்புதர், அற்புதர், அற்புதர் இயேசு அற்புதர் அண்டினோர் வாழ்வை இன்பமாய் மாற்றும் இயேசு அற்புதர் எல்லோரும் பாடுங்கள் கைத்தாளம் போடுங்கள் சந்தோஷத்துடனே சங்கீதம் பாடுங்கள் – அற்புதர்
1. என்னென்ன துன்பங்கள் நம்மில் வந்தபோதும் தீர்த்த இயேசு அற்புதர் எத்தனை தொல்லைகள் நம்மை சூழ்ந்த போதும் காத்த இயேசு அற்புதர் உலகத்தில் இருப்போனிலும் – எங்கள் இயேசு பெரியவர் அற்புதரே உண்மையாய் அவரைத் தேடும் யாவருக்கும் இயேசு அற்புதரே – எல்லோரும்
2. அலைகடல் மேலே நடந்தவர் எங்கள் இயேசு அற்புதர் அகோர காற்றையும் அமைதிப்படுத்திய இயேசு அற்புதர் அறைந்தனர் சிலுவையிலே ஆண்டவர் மரித்தார் அந்நாளினிலே ஆகிலும் மூன்றாம் நாள் உயிருடன் எழுந்த இயேசு அற்புதரே – எல்லோரும்

Thursday, 9 January 2020

Inba Yesu Rajavai Naan இன்ப இயேசு ராஜாவை நான்

Inba Yesu Rajavai Naan இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும் மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும் அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தால் போதும் 1. இயேசுவின் இரத்தத்தாலே மீட்கப்பட்டு வசனமாம் வேலியாலே காக்கப்பட்டு கறை திரை அற்ற பரிசுத்தரோடு ஏழை நான் பொன் வீதியில் உலாவிடுவேன் 2. தூதர்கள் வீணைகளை மீட்டும் போது நிறைவான ஜெய கோஷம் முழங்கும் போது அல்லேலூயா கீதம் பாடிக் கொண்டு அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன் 3. முட்கிரீடம் சூட்டப்பட்ட தலையைப் பார்ப்பேன் பொற்கிரீடம் சூட்டி நானும் புகழ்ந்திடுவேன் வாரினால் அடிப்பட்ட முதுகைப் பார்த்து ஒவ்வொரு காயங்களாய் முத்தம் செய்வேன் 4. என்னுள்ளம் நன்றியால் நிறைந்திடுதே எந்தனின் பாக்கிய வீட்டை நினைக்கையிலே அல்லேலூயா ஆமென் அல்லேலூயா வர்ணிக்க எந்தன் நாவு போதாதையா 5. ஆஹா எக்காளம் என்று முழங்கிடுமோ ஏழை என் ஆவல் என்று தீர்த்திடுமோ அப்பா என் கண்ணீர் என்று துடைக்கிறாரோ ஆவலாய் ஏங்கிடுதே எனதுள்ளமே

Wednesday, 8 January 2020

Kanden Kalvariyin Katchi கண்டேன் கல்வாரியின் காட்சி

Kanden Kalvariyin Katchi கண்டேன் கல்வாரியின் காட்சி கண்ணில் உதிரம் சிந்துதே அன்பான அண்ணல் நம் இயேசு நமக்காய் பட்ட பாடுகள் 1.பாவ உலகினிலே ஜீவிக்கும் மானிடரே பாரும் அவர் உனக்காய் குருதி சிந்தும் காட்சி 2.கல்வாரி மலை மீதிலே கள்ளர்கள் மத்தியிலே சிலுவையில் அறைந்தனரே எனக்காய் சிந்தும் காட்சி 3.என் ஆத்ம நேசரே என் இயேசு இன்பரே என்றும் நான் உமக்காய் நல் சேவை செய்திடுவேன்

Kartharin Panthiyil Vaa கர்த்தரின் பந்தியில் வா

Kartharin Panthiyil Vaa கர்த்தரின் பந்தியில் வா சகோதரா கர்த்தரின் பந்தியில் வா கர்த்தர் அன்பாய்ச் சொந்த ரத்தத்தைச் சிந்தின காரணத்தை மனப் பூரணமாய் எண்ணி - கர்த்தரின் 1. ஜீவ அப்பம் அல்லோ கிறிஸ்துவின் திருச் சரீரம் அல்லோ பாவ மனங் கல்லோ உனக்காய்ப் பகிரப்பட்ட தல்லோ தேவ குமாரனின் ஜீவ அப்பத்தை நீ தின்று அவருடன் என்றும் பிழைத்திட - கர்த்தரின் 2. தேவ அன்பைப் பாரு கிறிஸ்துவின் சீஷர் குறை தீரு பாவக் கேட்டைக் கூறு ராப்போசன பந்திதனில் சேரு சாவுக்குரிய மா பாவமுள்ள லோகம் தன்னில் மனம் வைத்து அன்னியன் ஆகாதே - கர்த்தரின் 3. அன்பின் விருந்தாமே கர்த்தருடன் ஐக்கியப் பந்தி யாமே துன்பம் துயர் போமே இருதயம் சுத்த திடனாமே இன்பம் மிகும் தேவ அன்பின் விருந்துக்கு ஏது தாமதமும் இல்லாதிப்போதே வா – கர்த்தரின்

Monday, 6 January 2020

Koodi Meetper Namathil கூடி மீட்பர் நாமத்தில்

Koodi Meetper Namathil 1. கூடி மீட்பர் நாமத்தில் அவர் பாதம் பணிவோம் யேசுவை இந் நேரத்தில் கண்டானந்தம் அடைவோம் ஆ இன்ப, இன்ப ஆலயம் நல் மீட்பர் கிருபாசனம் கண்டடைவோம் தரிசனம் இன்ப இன்ப ஆலயம் 2. இரண்டு மூன்று பேர் ஒன்றாய் கெஞ்சும் போது வருவார் வாக்குப் போல தயவாய் ஆசீர்வாதம் தருவார் — ஆ இன்ப 3. சொற்பப் பேராய்க் கூடினும் கேட்பதெல்லாம் தருவார் வாக்குப்படி என்றைக்கும் யேசு நம்மோடிருப்பார் — ஆ இன்ப 4. வாக்கை நம்பி நிற்கிறோம், அருள் கண்ணால் பாருமேன் காத்துக் கொண்டிருக்கிறோம், வல்ல ஆவி வாருமேன் — ஆ இன்ப

Kaaviyam Padiduven காவியம் பாடிடுவேன்

Kaaviyam Padiduven காவியம் பாடிடுவேன் காலமும் வாழ்வினிலே இயேசுவின் அன்பினையே இறைமகன் இயேசுவின் அன்பினையே இதயமெல்லாம் மகிழ்ந்திடவே கீதம் பாடிடுவேன் (2) --- காவியம் 1. சொந்தம் பந்தம் எல்லாம் வாழ்வில் மாறுமே நெஞ்சில் வாழும் இயேசு மாறா தெய்வமே (2) அதை நினைப்பதினால் நன்றியுடன் கீதம் பாடிடுவேன் (2)--- காவியம் 2. என்னை தேடி வந்தாய் அன்பாய் தேவனே என்றும் என்னை காக்கும் தெய்வம் இயேசுவே (2) அதை உள்ளத்திலே உணர்வதினால் கீதம் பாடிடுவேன்( 2)--- காவியம்

Sunday, 5 January 2020

Vallamai Arul Niraive Varum வல்லமை அருள் நிறைவே வாரும்

Vallamai Arul Niraive Varum வல்லமை அருள் நிறைவே வாரும் பின்மாரி பொழிந்திடுமே தேவ ஆவியே தாகம் தீருமே வல்லமையால் இன்று எமை நிரப்பிடுமே 1. புது எண்ணெய் அபிஷேகம் புது பெலன் அளித்திடுமே நவ மொழியால் துதித்திடவே வல்லமை அளித்திடுமே --- வல்லமை 2. உலர்ந்திடும் எலும்புகளும் உயிர் பெற்று எழும்பிடவே எழுப்புதலை கண்டிடவே வல்லமை அளித்திடுமே --- வல்லமை 3. அக்கினி அபிஷேகம் நுகத்தினை முறித்திடுமே சத்துருவை ஜெயித்திடவே சத்துவம் அளித்திடுமே --- வல்லமை 4. தூய நல் ஆவிதனை துக்கமும் படுத்தாமல் தூய வழி நடந்திடவே பெலன் தந்து காத்திடுமே --- வல்லமை 5. சத்திய ஆவியே நீர் நித்தமும் நடத்திடுமே முத்திரையாய் அபிஷேகியும் ஆவியின் அச்சாரமாய் --- வல்லமை 6. பெற்ற நல் ஆவிதனை காத்திட வரம் தாரும் ஆவியினால் நடந்திடவே ஆளுகை செய்திடுமே --- வல்லமை

Saturday, 4 January 2020

Kalaiyum Malai Evvaelaiyum காலையும் மாலை எவ்வேளையும்

Kalaiyum Malai Evvaelaiyum காலையும் மாலை எவ்வேளையும் கர்த்தரைக் கருத்துடன் பாடிடுவேன் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் எனத்தூதர் பாடிடும் தொனி கேட்குதே 1. கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் பெலனும் கிருபையாய் இரட்சிப்புமானார் அஞ்சிடாமல் கலங்காமல் பயமின்றித் திகிலின்றி அனுதினம் வாழ்ந்திடுவேன் — காலையும் 2. எனக்கெதிராய் ஓர் பாளையமிறங்கி என்மேல் ஓர் யுத்தம் வந்தாலும் பயப்படேன்; எதிராளி நிமித்தமாய் செவ்வையான பாதையில் நடத்திடுவார் — காலையும் 3. ஒன்றை நான் கேட்டேன் அதையே நாடுவேன் என்றும் தம் மகிமையைக் காண ஜீவனுள்ள நாளெல்லாம் தம் ஆலயத்தில் தங்குவதை வாஞ்சித்து நாடிடுவேன் — காலையும் 4. தீங்கு நாளில் தம் கூடார மறைவில் தேடிச் சேர்த்தென்னை மறைப்பார் உன்னதத்தில் மறைவாக ஒளித்தென்னைப் பாதுகாத்து உயர்த்துவார் கன்மலைமேல் — காலையும் 5. எந்தன் முகத்தைத் தேடுங்கள் என்று என் கர்த்தர் சொன்னதினாலே தம் முகத்தைத் தேடுவேனே கூப்பிடும் என் சத்தம் கேட்டு தயவாகப் பதிலளிப்பார் — காலையும் 6. தகப்பனும் தாயும் கைவிட்டாலும் என் கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்வார் எந்தன் உள்ளம் ஸ்திரமாகத் திடமாகக் கர்த்தருக்கே என்றென்றும் காத்திருக்கும் — காலையும் 7. எனக்காக யாவும் செய்து முடிப்பார் என் கர்த்தர் வாக்கு மாறிடார் தமக்கென்றும் பயந்திடும் பக்தர் யாவர் விருப்பமும் தவறாமல் நிறைவேற்றுவார் — காலையும்

Thursday, 2 January 2020

Enthan Vanjai Paralogame எந்தன் வாஞ்சை பரலோகமே

Enthan Vanjai Paralogame எந்தன் வாஞ்சை பரலோகமே என்று சேர்ந்திடுவேன் என் நேசரை என் ராஜனை என்று நான் கண்டிடுவேன் 1. நேசர் தேசமதில் என்றும் பேரின்பமே கண்ணீரெல்லாம் மாறிடுமே என்றும் ஆனந்தமே --- எந்தன் 2. சாவின் கூர்மை யாவும் அழிந்து ஒழிந்ததே சஞ்சலமோ அங்கில்லையே நேசரை கண்டிடுவேன் --- எந்தன் 3. வீதி பொன் மயமே பாடியே மகிழுவேன் இராப்பகலோ அங்கில்லையே வெளிச்சம் இயேசு தானே --- எந்தன் 4. ஜீவ தண்ணீரினால் தாகம் தீர்த்திடுவார் உள்ளமெல்லாம் ஏங்கிடுதே என்று சேர்ந்திடுவேன் --- எந்தன் 5. தேவ அன்பதுவே நெருக்கி ஏவிடுதே பிரிக்கவோ ஏதுமில்லை அன்பரை சேர்ந்திடுவேன் --- எந்தன்