Saturday, 17 August 2019

Thiruppaatham Nambi Vanthen திருப்பாதம் நம்பி வந்தேன்

Thiruppaatham Nambi Vanthen

திருப்பாதம் நம்பி வந்தேன்
கிருபை நிறை இயேசுவே
தமதன்பை கண்டைந்தேன்
தேவ சமூகத்திலே

1.இளைப்பாறுதல் தரும் தேவா
களைத்தோரைத் தேற்றிடுமே
சிலுவை நிழல் எந்தன் தஞ்சம்
சுகமாய் அங்குத் தங்கிடுவேன்     --- திருப்பாதம்

2.என்னை நோக்கிக் கூப்பிடு என்றீர்
இன்னல் துன்ப நேரத்திலும்
கருத்தாய் விசாரித்து என்றும்
கனிவோடென்னை நோக்கிடுமே     --- திருப்பாதம்

3.மனம் மாற மாந்தர் நீரல்ல
மன வேண்டுதல் கேட்டிடும்
எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே
இயேசுவே உம்மை அண்டிடுவேன்    --- திருப்பாதம்

4.என்னைக் கைவிடாதிரும் நாதா
என்ன நிந்தை நேரிடினும்
உமக்காக யாவும் சகிப்பேன்
உமது பெலன் ஈந்திடுமே    --- திருப்பாதம்

5.உம்மை ஊக்கமாய் நோக்கிப் பார்த்தே
உண்மையாய் வெட்கம் அடையேன்
தமது முகப் பிரகாசம்
தினமும் என்னில் வீசிடுதே     --- திருப்பாதம்

6.சத்துரு தலை கவிழ்ந்தோட
நித்தமும் கிரியை செய்திடும்
என்னைத் தேற்றிடும் அடையாளம்
இயேசுவே இன்று காட்டிடுமே      --- திருப்பாதம்

7.விசுவாசத்தால் பிழைத்தோங்க
வீரபாதைக் காட்டினீரே
மலர்ந்து கனிதரும் வாழ்வை
விரும்பி வரம் வேண்டுகிறேன்       --- திருப்பாதம்

8.பலர் தள்ளின மூலைக்கல்லே
பரம சீயோன் மீதிலே
பிரகாசிக்கும் அதை நோக்கி
பதறாமலே காத்திருப்பேன்        --- திருப்பாதம்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.