அதி சீக்கிரத்தில் நீங்கி விடும்
இந்த இலேசான உபத்திரவம்
சோர்ந்து போகாதே -நீ (2)
உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்
புதிதாக்கப்படுகின்ற நேரமிது -- சோர்ந்து
ஈடு இணையில்லா மகிமை
இதனால் நமக்கு வந்திடுமே -- சோர்ந்து
காண்கின்ற உலகம் தேடவில்லை
காணாதப் பரலோகம் நாடுகிறோம் -- சோர்ந்து
கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால்
பாக்கியம் நமக்கு பாக்கியமே -- சோர்ந்து
மன்னவன் இயேசு வருகையிலே
மகிழ்ந்து நாமும் களிகூருவோம் -- சோர்ந்து
மகிமையின் தேவ ஆவிதாமே
மண்ணான நமக்குள் வாழ்கின்றார் -- சோர்ந்து
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.