என்றும் ஆனந்தம்
என் இயேசு தருகிறார்
துதிப்பேன் துதிப்பேன்
துதித்து கொண்டேயிருப்பேன்
அல்லேலூயா ஆனந்தமே (2)
1.உன்னதர் மறைவில் வல்லவர் நிழலில்
என்றும் தங்குவேன்
தேவனை நோக்கி அடைக்கலப் பாறை
என்றே சொல்லுவேன் ---- அல்லேலூயா
2. தமது சிறகால் என்னை மூடி
காத்து நடத்துவார்
அவரது வசனம் ஆவியின் பட்டயம்
எனது கேடகம் ---- அல்லேலூயா
3. வழிகளிலெல்லாம் என்னைக் காக்க
துதர்கள் எனக்குண்டு
பாதம் கல்லில் மோதாமல் காத்து
கரங்களில் ஏந்துவார் ---- அல்லேலூயா
4. சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
நடந்தே செல்லுவேன்
சாத்தானின் சகல வலிமையை வெல்ல
அதிகாரம் எனக்குண்டு ---- அல்லேலூயா
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.