பலிபீடத்தில் என்னைப் பரனே
படைக்கிறேனே இந்த வேளை
அடியேனை திருச்சித்தம் போல
ஆண்டு நடத்திடுமே
கல்வாரியின் அன்பினையே
கண்டு விரைந்தோடி வந்தேன்
கழுவும் உம் திரு இரத்தத்தாலே
கறை நீங்க இருதயத்தை
1. நீரன்றி என்னாலே பாரில்
ஏதும் நான் செய்திட இயலேன்
சேர்ப்பீரே வழுவாது என்னைக்
காத்துமக்காய் நிறுத்தி
2. ஆவியோடாத்மா சரீரம்
அன்பரே உமக்கென்றும் தந்தேன்
ஆலய மாக்கியே இப்போ
ஆசீர்வதித்தருளும்
3. சுயமென்னில் சாம்பலாய் மாற
சுத்தாவியே அனல் மூட்டும்
ஜெயம் பெற்று மாமிசம் மாய
தேவா அருள் செய்குவீர்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.