Saturday, 24 July 2021

Vilaintha Palanai Arupparillai விளைந்த பலனை அறுப்பாரில்லை


 Vilaintha Palanai Arupparillai

விளைந்த பலனை அறுப்பாரில்லை

விளைவின் நற்பலன் வாடிடுதே

அறுவடை மிகுதி ஆளோ இல்லை

அந்தோ மனிதர் அழிகின்றாரே


1.அவர் போல் பேசிட நாவு இல்லை

அவர் போல் அலைந்திட கால்கள் இல்லை

எண்ணிலடங்கா மாந்தர் சத்தம்

உந்தன் செவியினில் தொனிக்கலையோ – விளைந்த


2. ஆத்தும இரட்சண்யம் அடையாதவர்

ஆயிரம் ஆயிரம் அழிகின்றாரே

திறப்பின் வாசலில் நிற்பவர் யார்

தினமும் அவர் குரல் கேட்கலையோ – விளைந்த


3.ஆத்தும தரிசனம் கண்டிடுவாய்

ஆண்டவர் வாக்கினை ஏற்றிடுவாய்

விரைந்து சென்று சேவை செய்வாய்

விளைவின் பலனை அறுத்திடுவாய் – விளைந்த


4.ஒரு மனம் ஒற்றுமை ஏக சிந்தை

சபைதனில் விளங்கிட செயல்படுவாய்

நிமிர்ந்து நிற்கும் தூண்களைப் போல்

நிலைவரமாய் என்றும் தாங்கி நிற்பாய் – விளைந்த


5.ஆவியின் வரங்கள் ஒன்பதனை

ஆவலுடன் நீயும் பெற்றிடுவாய்

சபையின் நன்மைக்காய் உபயோகிப்பாய்

சந்ததம் சபையினில் நிலைத்திருப்பாய் – விளைந்த


6.தேவனின் சேவையில் பொறுப்பெடுப்பாய்

உந்தனின் பங்கினை ஏற்றிடுவாய்

கர்த்தர் நாட்டின தோட்டத்திலே

கடைசிவரை நீயும் கனி கொடுப்பாய் – விளைந்த

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.