நன்றியால்
பொங்குதே எமதுள்ளம்
நாதன் செய்பல
நன்மைகட்காய்
நாள்தோறும்
நலமுடன் காத்தனரே
நன்றியால்
ஸ்தோத்தரிப்போம் அல்லேலூயா
நன்றியால்
ஸ்தோத்தரிப்போம்
1. கடந்த வாழ்நாளில் கருத்துடனே
கண்மணிபோல்
நம்மைக் காத்தனரே
கண்ணீர் கவலையினை
மாற்றினாரே
கனிவுடன் ஸ்தோத்தரிப்போம்
அல்லேலூயா
கனிவுடன் ஸ்தோத்தரிப்போம்
– நன்றியால்
2. ஜீவன் சுகம்
பெலன் யாவும் தந்து
ஜீவிய பாதை
நடத்தினாரே
ஜீவ காலமெல்லாம்
ஸ்தோத்தரிப்போம்
ஜீவனின் அதிபதியை
அல்லேலூயா
ஜீவனின் அதிபதியை
– நன்றியால்
3. அற்புத
கரம் கொண்டு நடத்தினாரே
அதிசயங்கள்
பல புரிந்தனரே
ஆயிரம் நாவுகள்
தான் போதுமா
ஆண்டவரைத்
துதிக்க அல்லேலூயா
ஆண்டவரைத்
துதிக்க – நன்றியால்
4. பாவ சேற்றில்
அமிழ்ந்த எம்மை
பாச கரம் கொண்டு
தூக்கினாரே
கன் மலைமேல்
நம்மை நிறுத்தி அவர்
கருத்துடன்
காத்தனரே அல்லேலூயா
கருத்துடன்
காத்தனரே – நன்றியால்
5. பொருத்தனை
பலிகள் தினம் செலுத்தி
பொற்பரன்
இயேசுவை வாழ்த்திடுவோம்
ஸ்தோத்திர
பாத்திரன் இயேசுவையே
நேத்திரமாய்
துதிப்போம் அல்லேலூயா
நேத்திரமாய்
துதிப்போம் – நன்றியால்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.