Friday, 16 July 2021

Thothira Pathirane தோத்திர பாத்திரனே


Thothira Pathirane 

தோத்திர பாத்திரனே தேவா

தோத்திரந் துதியுமக்கே

நேத்திரம் போல் முழு ராத்ரியுங்காத்தோய்

நித்தியம் துதியுமக்கே


1. சத்துரு பயங்களின்றி  நல்ல

நித்திரை செய்ய எமை

பத்திரமாய்ச்சீ ராட்டி உறக்கியே

சுற்றிலுங் கோட்டையானாய் 


2. விடிந்திருள் ஏகும்வரை  கண்ணின்

விழிகளை மூடாமல்,

துடி கொள் தாய்போல் படிமிசை எமது

துணை எனக் காத்தவனே 


3. காரிருள் அகன்றிடவே  நல்ல

கதிரொளி திகழ்ந்திடவே

பாரிதைப் புரட்டி உருளச் செய் தேகன

பாங்கு சீராக்கி வைத்தாய்


4. இன்றைத் தினமிதிலும்  தொழில்

எந்தெந்த வகைகளிலும்

உன் திருமறைப்படி ஒழுகிட எமக்கருள்

ஊன்றியே காத்துக் கொள்வாய்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.