Friday, 1 January 2021
Yesu Thane Athisaya Theivam இயேசு தானே அதிசய தெய்வம்
Yesu Thane Athisaya Theivamஇயேசு தானே அதிசய தெய்வம் என்றும் ஜீவிக்கிறார் நம் தெய்வம் 1. அதிசயமே அவர் அவதாரம் அதிலும் இனிமை அவர் உபகாரம் அவரைத் தெய்வமாய் கொள்வதே பாக்கியம் அவரில் நிலைத்து நிற்பதே சிலாக்கியம் — இயேசு 2. இருவர் ஒருமித்து அவர் நாமத்திலே இருந்தால் வருவார் இருவர் மத்தியிலே அந்தரங்கத்தில் அழுது நீ ஜெபித்தால் அவர் கரத்தால் முகம் தொட்டு துடைப்பார் — இயேசு 3. மனிதன் மறு பிறப்படைவதவசியம் மரித்த இயேசுவால் அடையும் இரகசியம் மறையும் முன்னே மகிபனைத் தேடு இறைவனோடு பரலோகம் சேரு — இயேசு 4. ஆவியினால் அறிந்திடும் தெய்வம் பாவிகளை நேசிக்கும் தெய்வம் ஆவியோடு உண்மையாய் தொழுதால் தேவசாயலாய் மாறி நீ மகிழ்வாய் — இயேசு
Location:
Nagercoil, Tamil Nadu, India
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.