Wednesday, 27 January 2021
Thuthi Thangiya Paramandalaதுதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம் சுப மங்கள மிகு சம்பிரம சுக சோபன ஷேமம் 1. அதி சுந்தர நிறை கொண்டுயர் அருள் மோக்கிஷ தீபன் கதி உம்பர்கள் தொழும் இங்கித கருணைப் பிரதாபன் — துதி 2. மந்தை ஆயர் பணிந்து பாதம் மகிழ்ந்து வாழ்த்திய அத்தனார் நிந்தையாய் ஒரு கந்தை மூடவும் வந்த மாபரி சுத்தனார் — துதி 3. திருவான் உல கரசாய் வளர் தேவ சொரூபனார் ஒரு மாதுடை வினை மாறிட நரர் ரூபமதானார் — துதி 4. அபிராம் முனி யிடமேவிய பதிலாள் உபகாரன் எபிரேயர்கள் குலம் தாவீதென் அரசற் கோர்குமாரன் — துதி 5. சாதா ரண வேதா கம சாஸ்த்ர சுவிசேஷன் கோதே புரி ஆதா முடை கோத்ர திரு வேஷன் — துதி 6. விண்ணாடரும் மண்ணாடரும் மேவுந் திருப் பாதன் பண்ணோதுவர் கண்ணாம் வளர் பர மண்டல நாதன் — துதி
Location:
Nagercoil, Tamil Nadu, India
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.