Tuesday, 12 January 2021
Ontrum illatha Nilaimaiyile ஒன்றும் இல்லாத நிலைமையிலே
Ontrum illatha Nilaimaiyileஒன்றும் இல்லாத நிலைமையிலே சகலமும் படைப்பவர் நம் தேவன் அவரே தேவன் அவரே தேவன் யேகோவா நல்தேவன் 1. பஞ்சத்தால் உள்ளம் சோர்ந்து போனாலும் கோதுமை மணிகள் அற்றுப் போனாலும் எலிசாவின் தேவன் நம்முடன் உண்டு (2) எண்ணிலடங்கா அற்புதம் செய்வார் அவர் --- அவரே 2. எதிரியின் கூட்டங்கள் மிகுந்து போனாலும் எல்லாமே தோல்வியாய் முடிந்து போனாலும் தாவீதின் தேவன் நம்முடன் உண்டு (2) ஜெயத்தின் மேல் ஜெயமே தந்திடுவாரே அவர் --- அவரே 3. சாத்தானின் சோதனை நம்மை சூழ்ந்தாலும் செல்வமும் சொந்தமும் விட்டுப் போனாலும் யோபுவின் தேவன் நம்முடன் உண்டு (2) இரட்டைத்தனையாய் பலன் தருவார் அவர் ---அவரே 4. பானையில் மாவு குறைந்து போனாலும் ஜாடியில் எண்ணெய் தீர்ந்து போனாலும் எலியாவின் தேவன் நம்முடன் உண்டு (2) காகத்தை அனுப்பி தினம் போஷிப்பார் அவர் --- அவரே
Location:
Nagercoil, Tamil Nadu, India
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.