Friday, 29 January 2021

Thedungal kandadaiveer தேடுங்கள் கண்டடைவீர்

 

Thedungal kandadaiveer

தேடுங்கள் கண்டடைவீர் தேவ தேவனின் தூய திருமுகம் காண தேடிடுவோம் அதிகாலமே 1. சென்ற வாழ்நாளெல்லாம் காத்தார் எந்த சேதமும் வந்தணுகாமல் இந்தப் புதுதினம் கண்டடைய தந்தனரே தமது கிருபை - தேடுங்கள் 2. நல்ல சுகம் பெலன் தந்து தம் வல்ல நல் ஆவியும் ஈந்து வெல்லப் பிசாசை ஜெயமெடுத்து சொல்லதம் அன்பென்னிலே பொழிந்தார்- தேடுங்கள் 3. ஊண் உடை தந்தாதரித்து இந்த ஊழிய பாதையில் காத்து கூப்பிடும் வேளை செவிகொடுத்து கேட்டிடும் யாவையும் ஈந்தனரே - தேடுங்கள் 4. ஜீவனும் உள்ள நாளெல்லாம் என் தேவனைக் கீர்த்தனம் பண்ணி ஓசையுள்ள கைத்தாளத்தோடே நேசையா இயேசுவை ஸ்தோத்தரிப்போம் - தேடுங்கள் 5. காலையில் ஸ்தோத்திரக் கீதம் இந்த வேளையில் வேதத்தின் தியானம் நல்ஜெப தூபம் எனது இன்பம் நற்கிரியைகளும் செய்துழைப்பேன் -தேடுங்கள் 6. கர்த்தரை நான் எப்பொழுதும் என் கண் முன்னில் நிறுத்தி நோக்க நாள் முழுதும் அவர் பின் நடக்க நேர்வழி பாதையுங் காட்டிடுவார் - தேடுங்கள்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.