Tuesday, 12 January 2021
Karththanai Valthukiren கர்த்தனை வாழ்த்துகிறேன்
Karththanai Valthukirenகர்த்தனை வாழ்த்துகிறேன் - அவர் கிருபைகள் என்னிடம் தங்க நன்மை நிறைந்த ஆண்டிதுவே நன்றியும் பொங்கப் பாடிடுவேன் 1.சுற்றிலும் ஸ்தோத்திர தொனி கேட்கும் வெற்றியின் சாட்சி கூறிடுவேன் இத்தனை ஆண்டுகள் ஜெயம் அளித்தார் எத்தனை நாவால் போற்றிடுவேன் 2.ஆண்டுகள் தோறும் வாக்குத்தத்தம் ஆண்டவர் அன்பாய் ஈந்திடுவார் கர்த்தரை நம்பியே திடமனதாய் கடந்திடுவேன் இவ்வாண்டினையும் 3.யூபிலி ஆண்டு விடுதலையே இயேசுவின் ஆவி வந்திறங்க கட்டுகள் யாவும் அகன்றனவே கலப்பையின் மேல் கை சேவிக்குதே 4.ஓர் புது பாதை தோன்றிடுதே ஓங்கும் தம் கைகள் தாங்கிடுமே கர்த்தரிடம் என் உடன்படிக்கை காத்துக் கொள்வேன் அந்நாள் வரையும் 5.சீக்கிரம் இயேசு வந்திடுவார் சேர்ந்திடுவேன் நான் சீயோனிலே சீரழியும் இந்த மண்ணுலகம் சீர் புகழ் ஓங்கும் விண்ணுலகம்
Location:
Nagercoil, Tamil Nadu, India
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.