Friday, 8 January 2021
Andavarin Thottam ஆண்டவரின் தோட்டம்
Andavarin Thottamஆண்டவரின் தோட்டம் அழகு மலர் கூட்டம் ஆடிப்பாட நெஞ்சை தூண்டுது அன்பு பொங்கும் உள்ளம் அருள் வசந்த இல்லம் ஆண்டவரைப் புகழச் சொல்லுது தேவ ஜீவராகம் பிறந்திட ஜோதி ரூபம் நாளும் முழங்கிட ஆடிப்பாடுவோம் வையகமே வானகமே விண் ஒளிரும் மீனினமே சூரியனே சந்திரனே திரண்டு வாருங்கள் 1. ஆறுகளே அருவிகளே வாருங்கள் நன்கு ஆர்ப்பரிக்கும் கடலினமே வணங்குங்கள் நானிலமே நவமணியே கூடுங்கள் (2) நம் நாயகனாம் இயேசுவையே பாடுங்கள் 2. மாநிலமே மேனிலமே நில்லுங்கள் நீல மலர் முடியே மனுக்குலமே கேளுங்கள் பறவைகளே பறவைகளே வாருங்கள் (2) நம் பரம பிதா இரக்கத்தையே போற்றுங்கள்
Location:
Nagercoil, Tamil Nadu, India
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.