Sunday, 31 January 2021
Search Me O God
1. Search me O God my actions try And let my life appear As seen by thine all searching eye To mine my ways make clear. 2. Search all my sense and know my heart Who only canst make known And let the deep the hidden part To me be fully shown. 3. Throw light into the darkened cells Where passion reigns within Quicken my conscience till it feels The loathsomeness of sin 4. Search all my thoughts the secret springs The motives that control The chambers where polluted things Hold empire over the soul. 5. Search till Thy fiery glance has cast Its holy light through all And I by grace am brought at last Before Thy face to fall 6. Thus prostrate I shall learn of Thee What now I feebly prove That God alone in Christ can be Unutterable love
Arainthu Paarum Karthare ஆராய்ந்து பாரும் கர்த்தரே
Arainthu Paarum Karthare1. ஆராய்ந்து பாரும் கர்த்தரே என் செய்கை யாவையும் நீர் காணுமாறு காணவே என்னில் பிரகாசியும் 2. ஆராயும் என்தன் உள்ளத்தை நீர் சோதித்தறிவீர் என் அந்தரங்க பாவத்தை மா தெளிவாக்குவீர் 3. ஆராயும் சுடரொளியால் தூராசை தோன்றவும் மெய் மனஸ்தாபம் அதனால் உண்டாக்கியருளும் 4. ஆராயும் சிந்தை யோசனை எவ்வகை நோக்கமும் அசுத்த மனோபாவனை உள்ளிந்திரியங்களும் 5. ஆராயும் மறைவிடத்தை உம் தூயக் கண்ணினால் அரோசிப்பேன் என் பாவத்தை உம் பேரருளினால் 6. இவ்வாறு நீர் ஆராய்கையில் சாஷ்டாங்கம் பண்ணுவேன் உம் சரணார விந்தத்தில் பணிந்து போற்றுவேன்
Saturday, 30 January 2021
Naan Paadum Kanangalal நான் பாடும் கானங்களால்
Naan Paadum Kanangalalநான் பாடும் கானங்களால் என் இயேசுவைப் புகழ்வேன் என் ஜீவிய காலம் வரை அவர் மாறாத சந்தோஷமே – நான் 1. பாவ ரோகங்கள் மாற்றியே எந்தன் கண்ணீரைத் துடைப்பவரே உலகம் வெறுத்தென்னைத் தள்ள பாவியாம் என்னை மீட்டெடுத்தீர் — நான் 2. இளமைப் பிராய வீழ்ச்சிகள் இல்லை யாதொரு பயமுமில்லை அவர் ஸ்நேக தீபத்தின் வழியில் தம் கரங்களால் தாங்கிடுவார் — நான் 3. நல்ல போராட்டம் போராடி எந்தன் ஓட்டத்தை முடித்திடுவேன் விலையேறிய திருவசனம் எந்தன் பாதைக்குத் தீபமாகும் — நான்
Friday, 29 January 2021
Thedungal kandadaiveer தேடுங்கள் கண்டடைவீர்
Thedungal kandadaiveer
தேடுங்கள் கண்டடைவீர் தேவ தேவனின் தூய திருமுகம் காண தேடிடுவோம் அதிகாலமே 1. சென்ற வாழ்நாளெல்லாம் காத்தார் எந்த சேதமும் வந்தணுகாமல் இந்தப் புதுதினம் கண்டடைய தந்தனரே தமது கிருபை - தேடுங்கள் 2. நல்ல சுகம் பெலன் தந்து தம் வல்ல நல் ஆவியும் ஈந்து வெல்லப் பிசாசை ஜெயமெடுத்து சொல்லதம் அன்பென்னிலே பொழிந்தார்- தேடுங்கள் 3. ஊண் உடை தந்தாதரித்து இந்த ஊழிய பாதையில் காத்து கூப்பிடும் வேளை செவிகொடுத்து கேட்டிடும் யாவையும் ஈந்தனரே - தேடுங்கள் 4. ஜீவனும் உள்ள நாளெல்லாம் என் தேவனைக் கீர்த்தனம் பண்ணி ஓசையுள்ள கைத்தாளத்தோடே நேசையா இயேசுவை ஸ்தோத்தரிப்போம் - தேடுங்கள் 5. காலையில் ஸ்தோத்திரக் கீதம் இந்த வேளையில் வேதத்தின் தியானம் நல்ஜெப தூபம் எனது இன்பம் நற்கிரியைகளும் செய்துழைப்பேன் -தேடுங்கள் 6. கர்த்தரை நான் எப்பொழுதும் என் கண் முன்னில் நிறுத்தி நோக்க நாள் முழுதும் அவர் பின் நடக்க நேர்வழி பாதையுங் காட்டிடுவார் - தேடுங்கள்
Thursday, 28 January 2021
Thooya Devanai Thuthithiduvom தூய தேவனை துதித்திடுவோம்
Thooya Devanai Thuthithiduvomதூய தேவனை துதித்திடுவோம் நேயமாய் நம்மை நடத்தினாரே ஓயாப் புகழுடன் கீதம் பாடி தினம் போற்றியே பணிந்திடுவோம் – அல்லேலூயா 1. கடந்திட்ட நாட்களில் அவர் கரங்கள் கனிவுடன் நம்மை அரவணைத்தே நம் கால்களை கன்மலையின் மேல் நிறுத்தியே நிதம் நம்மை வழி நடத்தும் 2. யோர்தானைப் போல் வந்த துன்பங்களை இயேசுவின் பெலன் கொண்டு கடந்து வந்தோம் அவர் கரத்தைப் பிடித்துக் கொண்டே பரிசுத்த பாதையில் நடந்திடுவோம் 3. கழுகுக்கு சமமாய் நம் வயது திரும்பவும் வால வயதாகும் புது நன்மையால் புது பெலத்தால் நிரம்பியே நம் வாயும் திருப்தியாகும் 4. தாவீதுக்கருளின மாகிருபை தாசராம் நமக்குமே தந்திடுவார் எலிசாவைப் போல் இருமடங்கு வல்லமையால் நம்மை அபிஷேகிப்பார் 5. நலமுடன் நம்மை இதுவரையும் கர்த்தரின் அருள் என்றும் நிறுத்தியதே கண்மணி போல் கடைசிவரை காத்திடும் கர்த்தரைப் போற்றிடுவோம்
Wednesday, 27 January 2021
Thuthi Thangiya Paramandalaதுதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம் சுப மங்கள மிகு சம்பிரம சுக சோபன ஷேமம் 1. அதி சுந்தர நிறை கொண்டுயர் அருள் மோக்கிஷ தீபன் கதி உம்பர்கள் தொழும் இங்கித கருணைப் பிரதாபன் — துதி 2. மந்தை ஆயர் பணிந்து பாதம் மகிழ்ந்து வாழ்த்திய அத்தனார் நிந்தையாய் ஒரு கந்தை மூடவும் வந்த மாபரி சுத்தனார் — துதி 3. திருவான் உல கரசாய் வளர் தேவ சொரூபனார் ஒரு மாதுடை வினை மாறிட நரர் ரூபமதானார் — துதி 4. அபிராம் முனி யிடமேவிய பதிலாள் உபகாரன் எபிரேயர்கள் குலம் தாவீதென் அரசற் கோர்குமாரன் — துதி 5. சாதா ரண வேதா கம சாஸ்த்ர சுவிசேஷன் கோதே புரி ஆதா முடை கோத்ர திரு வேஷன் — துதி 6. விண்ணாடரும் மண்ணாடரும் மேவுந் திருப் பாதன் பண்ணோதுவர் கண்ணாம் வளர் பர மண்டல நாதன் — துதி
Sunday, 24 January 2021
Setham Ara Yavum Vara சேதம் அற யாவும் வர
Setham Ara Yavum Vara1. சேதம் அற யாவும் வர கர்த்தர் ஆதரிக்கிறார் காற்றடித்தும் கொந்தளித்தும் இயேசுவை நீ பற்றப்பார். 2. இயேசு பாரார் அவர் காரார் தூங்குவார் என்றெண்ணாதே கலங்காதே தவிக்காதே நம்பினோனை விடாரே. 3. கண்மூடாத உறங்காத உன் கர்த்தாவைப் பற்றி நீ அவர்தாமே காப்பாராமே என்று அவரைப் பணி. 4. உன் விசாரம் மா விஸ்தாரம் ஆகிலும் கர்த்தாவுக்கு நீ கீழ்ப்பட்டு கிலேசமற்று அவருக்குக் காத்திரு. 5. தெய்வ கைக்கும் வல்லமைக்கும் சகலமும் கூடாதோ எந்தச் சிக்கும் எந்தப் பிக்கும் அவரால் அறும் அல்லோ 6. சீரில்லாத உன் ஆகாத மனதுன்னை ஆள்வது நல்லதல்ல அதற்கல்ல கர்த்தருக்குக் கீழ்ப்படு. 7. கர்த்தர் தந்த உன்மேல் வந்த பாரத்தைச் சுமந்திரு நீ சலித்தால் நீ பின்னிட்டால் குற்றம் பெரிதாகுது. 8. ஆமேன் நித்தம் தெய்வ சித்தம் செய்யப்பட்ட யாவையும் நீர் குறித்து நீர் கற்பித்து நீர் நடத்தியருளும்.
Saturday, 23 January 2021
Thuthisei Maname துதிசெய் மனமே
Thuthisei Manameதுதிசெய் மனமே நிதம் துதிசெய் துதிசெய் இம்மட்டும் நடத்திய உன் தேவனை இன்றும் என்றும் நன்றி மிகுந்த மனதோடே (2) 1. உன் காலமெல்லாம் உன்னைத் தம் கரமதில் ஏந்தி வேண்டிய நன்மைகள் யாவும் உகந்தளித்தாரே - துதி 2. ஏகிடும் வழியில் பாடுகள் பல நேர்ந்தபோது ஏக பரன் உன் காவலனாயிருந்தாரே - துதி 3. சோதனை பலமாய் மேகம் போல் உன்னைச் சூழ்ந்தாலும் சேதமுறாமல் முற்றிலும் காக்க வல்லோரை - துதி 4. தாய் தந்தை தானும் ஏகமாய் உன்னை மறந்தாலும் தூயரின் கையில் உன் சாயல் உள்ளதை நினைத்தே - துதி 5. சந்ததம் உன்னை நடத்திடும் சத்திய தேவன் சொந்தம் பாராட்டி உன்னுடன் இருப்பதினாலே - துதி
Friday, 22 January 2021
Inimai Inimai இனிமை இனிமை
Inimai Inimaiஇனிமை இனிமை இது இனிமை மகிமை மகிமை புது மகிமை இயேசுவின் மார்பில் நான் சாய்ந்து கொண்டிருந்தால் இந்த நாள் முழுவதும் இல்லை தனிமை -3 1. காலையும் மாலையும் புது கிருபை கண்ணின் மணிபோல காக்கும் கிருபை இறுதிவரைக்கும் வரும் கிருபை நிலைத்திருக்கும் நம் தேவ கிருபை 2. மலைகள் விலகினாலும் மாறா கிருபை மன்னன் இயேசு வாக்களித்த வல்ல கிருபை பர்வதங்கள் பெயர்ந்து பயங்கரம் சூழ்ந்தாலும் பரிசுத்தவான்களைக் காக்கும் கிருபை 3. அனாதி சினேகத்தால் வந்த கிருபை ஆயிரம் தலைமுறை காக்கும் கிருபை அழகிய தேவகுமாரன் இயேசு அளித்திட்ட அதிசயமான கிருபை 4. வனாந்தர வழிதனில் வந்த கிருபை வழிதப்பிப்போனோரைக் காக்கும் கிருபை வல்லமையுள்ள தேவனின் ஆவி வரம் தந்து காத்திட்ட தேவகிருபை
Thursday, 21 January 2021
Rajareega kempeera Thoniyode ராஜரீக கெம்பீர தொனியோடே
Rajareega kempeera Thoniyode1. ராஜரீக கெம்பீர தொனியோடே ராஜ ராஜனை தேவ தேவனை வெற்றியோடு பாடி பக்தியோடு நாடி வீரசேனை கூட்டமாக சேவிப்போம் மெய் சீஷராக ஏசுவின் பின் செல்லுவோம் முற்று முடிய வெற்றியடைய சற்றும் அஞ்சிடாமல் ஏசு நாமத்தில் சாத்தானை தோற்கடித்து மேற்கொள்வோம் 2. சூலமித்தி இரண்டு சேனைக் கொப்பாக சூரியனைப் போல் சந்திரனைப் போல் கொடிகள் பறக்க சாட்சிகள் சிறக்க கீதம் பாடி ஜெயம் பெற்று செல்கின்றாள் - மெய் சீஷராக 3. தாவீதை விரட்டிடும் சவுல் கைகள் தளர்ந்திடவே அடங்கிடவே பிலேயாமின் சாபம் பறந்தோடிப் போகும் பரிசுத்தவான்களே கெம்பீரிப்போம் - மெய் சீஷராக 4. ஜெபமே எமது அஸ்திபாரமே ஜெபமின்றியே ஜெயமில்லையே ஆவியில் ஜெபிப்போம் அற்புதங்கள் காண்போம் ஆச்சரியமாகவே நடத்துவார் - மெய் சீஷராக 5. செங்கடல் நடுவிலே நடத்தினார் எங்கள் ஆண்டவர் சர்வ வல்லவர் கடலை பிளந்து நதியைப் பிரித்து காய்ந்து நிற்கும் பூமியிலே நடத்துவார்- மெய் சீஷராக 6. பரலோகவாசிகள் சுதேசிகள் பரதேசிகள் சில சீஷர்கள் பின்திரும்பிடாமல் விட்டதைத் தொடாமல் பற்றும் விசுவாசத்தோடு முன்செல்வோம் - மெய் சீஷராக 7. குணசாலிகள் கூடாரவாசிகள் கூட்டமாகவே கூடிச்சேரவே மணவாளனை நம் மன்னன் இயேசுவை தம் மங்கள சுபதினம் கண்ணால் காண்போம் - மெய் சீஷராக
Wednesday, 20 January 2021
Mangala Geethangal Padiduvom மங்கள கீதங்கள் பாடிடுவோம்
Mangala Geethangal Padiduvom1. மங்கள கீதங்கள் பாடிடுவோம் மணவாளன் இயேசு மனமகிழ கறை திரை நீக்கி திருச்சபையாக்கி காத்தனர் கற்புள்ள கன்னிகையாய் கோத்திரமே யூதா கூட்டமே தோத்திரமே துதி சாற்றிடுவோம் புழுதியினின்றெம்மை உயர்த்தினாரே புகழ்ந்தவர் நாமத்தைப் போற்றிடுவோம் 2. ராஜ குமாரத்தி ஸ்தானத்திலே ராஜாதி ராஜன் இயேசுவோடே இன ஜன நாடு தகப்பனின் வீடு இன்பம் மறந்து சென்றிடுவோம் 3. சித்திர தையலுடை அணிந்தே சிறந்த உள்ளான மகிமையிலே பழுதொன்றுமில்லா பரிசுத்தமான பாவைகளாக புறப்படுவோம் 4. ஆரங்கள் பூட்டி அலங்கரித்தே அவர் மணவாட்டி ஆக்கினாரே விருந்தறை நேச கொடி ஒளி வீச வீற்றிருப்போம் சிங்காசனத்தில் 5. தந்தத்தினால் செய்த மாளிகையில் தயாபரன் இயேசு புறப்பாடுவார் மகிழ் கமழ் வீச மகத்துவ நேசர் மன்னன் மணாளன் வந்திடுவர்
Yesuvin Namam Onkidave இயேசுவின் நாமம் ஓங்கிடவே
Yesuvin Namam Onkidaveஇயேசுவின் நாமம் ஓங்கிடவே நேசமுடன் புகழ் பாடிடுவோம் காசினியில் நிகர் வேறதற்கில்லை தாசர்கள் நாம் துதி சாற்றிடுவோம் வானமும் பூமியும் யாவையுமே வார்த்தையினால் உண்டாக்கினவர் என்னை மண்ணென்று நினைவாக்கினவர் எனக்கென்றும் சொந்தமவர் 1. அற்புதமாம் அதிசயமாம் ஆண்டவர் இயேசுவின் நாமமதே பேய் நடுங்கும் கடும் நோய் அகலும் நல் பேர் புகழ் ஓங்கிடும் நாமமதே 2. வாழ்ந்திடும் வானோர் பூதலத்தோர் வாழ்த்தி வணங்கிடும் நாமமதே மானிடரின் முழங்கால் முடங்கும் மெய் மேன்மை உயர் திரு நாமமதே 3. சாவு பயங்கள் நீங்கிடவே சத்துருமேல் ஜெயம் பெற்றிடவே சோதனையில் பல வேதனையில் என் சொந்த அடைக்கல நாமமதே 4. வந்துன்னைச் சேர்ப்பேனென்றுரைத்த வல்ல கிறிஸ்தேசுவின் நாமமதே நீடுழியாய் நித்ய ராஜ்யத்திலே -தம் நாமமதை நான் போற்றிடுவேன்
Monday, 18 January 2021
Potriduven Paraparanai போற்றிடுவேன் பராபரனை
Potriduven Paraparanaiபோற்றிடுவேன் பராபரனை சாற்றிடுவேன் சர்வவல்லவரை ஸ்தோத்திர பாத்திரன் இயேசுவையே நேத்திரமாய் என்றும் பாடுவேன் ஆ ஆர்ப்பரித்தே அகமகிழ்வேன் ஆண்டவர் அன்பதை எங்கும் கூறுவேன் கண்மணி போல் கருத்துடனே கைவிடாமல் என்னைக் காத்தனரே 1. எத்தனையோ பல நன்மைகள் இத்தனை ஆண்டுகளாய் அளித்தார் கர்த்தரே நல்லவர் என்பதையே கருத்துடனே ருசித்திடுவேன் 2. பயப்படாதே என்றுரைத்தனரே பரிசுத்த ஆவியானவரே வெள்ளம் போல் சத்துரு வந்திடினும் விரைந்தவரே கொடியேற்றினார் 3. பொருத்தனைகள் துதி பலிகள் பணிவுடன் செலுத்தி ஜெபித்திடுவேன் ஆபத்துக் காலத்தில் கூப்பிடுவேன் ஆண்டவரே செவி கொடுப்பார் 4. நித்தமும் போதித்து நடத்தி நித்திய ஆலோசனை அளிப்பார் முடிவிலே மகிமையில் சேர்த்திடுவார் மகிழ்ந்திடுவேன் நித்தியமாய்
Sunday, 17 January 2021
Theevinai Seiyathe தீவினை செய்யாதே
Theevinai Seiyathe1. தீவினை செய்யாதே மா சோதனையில் பொல்லாங்கனை வென்று போராட்டத்தினில் வீண் ஆசையை முற்றும் கீழடக்குவாய் யேசையரை நம்பி வென்றேகிப்போவாய் ஆற்றித் தேற்றியே காப்பார் நித்தம் உதவி செய்வார் மீட்பர் பெலனை ஈவார் ஜெயம் தந்திடுவார் 2. வீண் வார்த்தை பேசாமல் வீண் தோழரையும் சேராமலே நீங்கி நல்வழியிலும் நின் ஊக்கமும் அன்பும் சற்றேனும் விடாய் யேசையரை நம்பி வென்றேகிப்போவாய் 3. மெய் விசுவாசத்தாலே வென்றேகினோன்தான் பொற்கிரீடம் பெற்றென்றும் பேர் வாழ்வடைவான் மா நேசரின் பெலன் சார்ந்தே செல்லுவாய் யேசையரை நம்பி வென்றேகிப்போவாய்
Friday, 15 January 2021
Sthothiram Yesu Natha ஸ்தோத்திரம் இயேசு நாதா
Sthothiram Yesu Natha1. ஸ்தோத்திரம் இயேசு நாதா உமக்கென்றும் ஸ்தோத்திரம் இயேசு நாதா ஸ்தோத்திரம் செய்கிறோம் நின்னடியார் திரு நாமத்தின் ஆதரவில் 2. வான துதர் சேனைகள் மனோகர கீதங்களால் எப்போதும் ஓய்வின்றிப் பாடித் துதிக்கப் பெறும் மன்னவனே உமக்கு 3. இத்தனை மகத்துவமுள்ள பதவி இவ்வேழைகள் எங்களுக்கு எத்தனை மாதயவு நின் கிருபை எத்தனை ஆச்சரியம் 4. நின் உதிரமதினால் திறந்த நின் ஜீவப் புது வழியாம் நின் அடியார்க்குப் பிதாவின் சந்நிதி சேரவுமே சந்ததம் 5. இன்றைத் தினமதிலும் ஒருமித்துக்கூட உம் நாமத்தினால் தந்த நின் கிருபைக்காய் உமக்கென்றும் ஸ்தோத்திரம், ஸ்தோத்திரமே 6. நீரல்லால் எங்களுக்குப் பரலோகில் யாருண்டு ஜீவநாதா நீரேயன்றி இகத்தில் வேறொரு தேட்டமில்லை பரனே
Sthothiram Thuthi Pathira ஸ்தோத்திரம் துதி பாத்திரா
Sthothiram Thuthi Pathiraஸ்தோத்திரம் துதி பாத்திரா உம்மை இன்றும் என்றும் துதித்திடுவேன் காத்தீரே என்னைக் கருத்தாக வழுவாமல் என்னை உமக்காக எடுத்தீர் என்னையும் உமக்காக கொடுத்தீர் உம்மையும் எனக்காக 1. வல்ல வான ஞான வினோதா துதியே துதியே துதித்திடுவேன் எல்லாக் குறையும் தீர்த்தீரே தொல்லை யாவும் தொலைத்தீரே அல்லல் யாவும் அறுத்தீரே அலையும் என்னையும் மீட்டீரே 2. நம்பினோரைக் காக்கும் தேவா துதியே துதியே துதித்திடுவேன் அம்புவி யாவும் படைத்தீரே அம்பரா உந்தன் வாக்காலே எம்பரா எல்லாம் ஈந்தீரே நம்பினோர்குந்தன் தயவாலே 3. கண்ணின் மணிபோல் காத்தீரே எம்மைத் துதியே துதியே துதித்திடுவேன் அண்ணலே உந்தன் அருளாலே அடியாரைக் கண் பார்த்தீரே மன்னா எமக்கும் நீர் தானே எந்நாளும் எங்கள் துணை நீரே 4. தீயோன் அம்புகள் தாக்காதே எம்மைத் துதியே துதியே துதித்திடுவேன் தேவே நீர் உந்தன் சிறகாலே தினமும் மூடிக் காத்தீரே தீதணுகாதும் மறைவினிலே தேடியுமதடி தங்கிடுவேன் 5. அல்லேலூயா ஸ்தோத்திரமே துதியே துதியே துதித்திடுவேன் அகில சிருஷ்டிகளும் துதிக்க அடிமை துதியாதிருப்பேனோ அல்லும் பகலும் நித்தியமாய் அன்பே உம்மையே துதித்திடுவேன்
Tuesday, 12 January 2021
Ontrum illatha Nilaimaiyile ஒன்றும் இல்லாத நிலைமையிலே
Ontrum illatha Nilaimaiyileஒன்றும் இல்லாத நிலைமையிலே சகலமும் படைப்பவர் நம் தேவன் அவரே தேவன் அவரே தேவன் யேகோவா நல்தேவன் 1. பஞ்சத்தால் உள்ளம் சோர்ந்து போனாலும் கோதுமை மணிகள் அற்றுப் போனாலும் எலிசாவின் தேவன் நம்முடன் உண்டு (2) எண்ணிலடங்கா அற்புதம் செய்வார் அவர் --- அவரே 2. எதிரியின் கூட்டங்கள் மிகுந்து போனாலும் எல்லாமே தோல்வியாய் முடிந்து போனாலும் தாவீதின் தேவன் நம்முடன் உண்டு (2) ஜெயத்தின் மேல் ஜெயமே தந்திடுவாரே அவர் --- அவரே 3. சாத்தானின் சோதனை நம்மை சூழ்ந்தாலும் செல்வமும் சொந்தமும் விட்டுப் போனாலும் யோபுவின் தேவன் நம்முடன் உண்டு (2) இரட்டைத்தனையாய் பலன் தருவார் அவர் ---அவரே 4. பானையில் மாவு குறைந்து போனாலும் ஜாடியில் எண்ணெய் தீர்ந்து போனாலும் எலியாவின் தேவன் நம்முடன் உண்டு (2) காகத்தை அனுப்பி தினம் போஷிப்பார் அவர் --- அவரே
O Perfect Love All
O Perfect Love all human thought transcendingLowly we kneel in prayer before Thy throne That theirs may be the love which knows no ending Whom Thou forever more dost join in one. O Perfect Life Be Thou their full assurance of tender charity and steadfast love of patient hope and quiet brave endurance with childlike trust that fears no pain or death. Grant them that joy that brightens earthly sorrow Grant them the peace which calms all earthly strife and to life's day the glorious unknown morrow that dawns upon eternal love and life.
The Voice That Breathed
1. The voice that breathed o'er Eden,That earliest wedding day The primal marriage blessing It hath not passed away. 2. Still in the pure espousal Of Christian man and maid The holy Three are with us The three fold grace is said. 3. Be present awful Father, To give away this bride As Eve Thou gravest to Adam Out of His own pierced side: 4. Be present, Son of Mary, To join their loving hands, As Thou didst bind two natures In thine eternal bands 5. Be present holiest Spirit, To bless them as they kneel, As Thou, for Christ the Bridegroom, The heavenly Spouse dost seal 6. O spread Thy pure wing o'er them, Let no ill power find place, When onward to Thine altar Their hallowed path they trace, 7. To cast their crowns before Thee In perfect sacrifice Till to the home of gladness With Christ's own Bride they rise.
Buthikkettatha Anbin புத்திக் கெட்டாத அன்பின்
Buthikkettatha Anbin1. புத்திக் கெட்டாத அன்பின் வாரீ பாரும் உம் பாதம் அண்டினோமே தேவரீர் விவாகத்தால் இணைக்கும் இருபேரும் ஒன்றாக வாழும் அன்பை ஈகுவீர். 2. ஆ ஜீவ ஊற்றே, இவரில் உம்நேசம் நல் நம்பிக்கையும், நோவு சாவிலும் உம்பேரில் சாரும் ஊக்க விசுவாசம் குன்றாத தீரமும் தந்தருளும். 3. பூலோகத் துன்பம் இன்பமாக மாற்றி மெய்ச் சமாதானம் தந்து தேற்றுவீர் வாழ்நாளின் ஈற்றில் மோட்ச கரையேற்றி நிறைந்த ஜீவன் அன்பும் நல்குவீர்.
Karththanai Valthukiren கர்த்தனை வாழ்த்துகிறேன்
Karththanai Valthukirenகர்த்தனை வாழ்த்துகிறேன் - அவர் கிருபைகள் என்னிடம் தங்க நன்மை நிறைந்த ஆண்டிதுவே நன்றியும் பொங்கப் பாடிடுவேன் 1.சுற்றிலும் ஸ்தோத்திர தொனி கேட்கும் வெற்றியின் சாட்சி கூறிடுவேன் இத்தனை ஆண்டுகள் ஜெயம் அளித்தார் எத்தனை நாவால் போற்றிடுவேன் 2.ஆண்டுகள் தோறும் வாக்குத்தத்தம் ஆண்டவர் அன்பாய் ஈந்திடுவார் கர்த்தரை நம்பியே திடமனதாய் கடந்திடுவேன் இவ்வாண்டினையும் 3.யூபிலி ஆண்டு விடுதலையே இயேசுவின் ஆவி வந்திறங்க கட்டுகள் யாவும் அகன்றனவே கலப்பையின் மேல் கை சேவிக்குதே 4.ஓர் புது பாதை தோன்றிடுதே ஓங்கும் தம் கைகள் தாங்கிடுமே கர்த்தரிடம் என் உடன்படிக்கை காத்துக் கொள்வேன் அந்நாள் வரையும் 5.சீக்கிரம் இயேசு வந்திடுவார் சேர்ந்திடுவேன் நான் சீயோனிலே சீரழியும் இந்த மண்ணுலகம் சீர் புகழ் ஓங்கும் விண்ணுலகம்
Sunday, 10 January 2021
Manam Isainthu Anaivarum மனம் இசைந்து அனைவரும்
Manam Isainthu Anaivarumமனம் இசைந்து அனைவரும் உடன் பிறப்பாய் தினம் வாழ்வது சிறப்பானது நன்மையானது இன்பமானது மண்வாழ்வினில் பேரழகு 1. அது - ஆரோனின் தலைமீது பொழிந்து அவனது தாடியில் வழிந்து அங்கியில் குழைந்து தொங்கலில் இழைந்து கீழ் வடிந்திடும் பரிமளம் போன்றது 2. அது - எர்மோனின் மலையதன் மேலும் சீயோனின் சிகரங்கள் மீதும் மெல்லெனக் கவிந்து சில்லெனக் குவிந்து தினம் படர்ந்திடும் பனியினைப் போன்றது 3. இன்று - இனம்மொழி பொருள்நிலை கொண்டு எத்தனை பிரிவுகள் உண்டு அன்பினில் பகிர்ந்துஇன்பமாய் இணைந்து ஒன்றாய் இணைந்து வாழ்வதே அருளரசு
Friday, 8 January 2021
Nandri Solli Paduven நன்றி சொல்லி பாடுவேன்
Nandri Solli Paduvenநன்றி சொல்லி பாடுவேன் நாதன் இயேசுவின் நாமத்தையே நன்றியால் என் உள்ளம் நிறைந்தே நாதன் இயேசுவைப் போற்றிடுவேன் நல்லவரே வல்லவரே நன்மைகள் என் வாழ்வில் செய்பவரே 1. கடந்த நாட்கள் முழுவதும் என்னை கண்ணின் மணி போல் காத்தாரே கரத்தைப் பிடித்துக் கைவிடாமல் கனிவாய் என்னை நடத்தினாரே 2. எரிகோ போன்ற எதிர்ப்புகள் எனக்கு எதிராய் வந்து எழும்பினாலும் சேனையின் கர்த்தர் என் முன்னே செல்கிறார் என்று பயப்படேனே 3. துன்பங்கள் எந்தன் வாழ்வினிலே சூழ்ந்து என்னை நெருக்கினாலும் கன்மலை தேவன் என்னோடு இருக்க கவலையில்லை என் வாழ்விலே 4. மேகங்கள் மீது மன்னவன் இயேசு வேகம் வருவார் ஆனந்தமே கண்ணீர் துடைத்து பலனைக் கொடுக்க கர்த்தாதி கர்த்தர் வருகின்றாரே
Andavarin Thottam ஆண்டவரின் தோட்டம்
Andavarin Thottamஆண்டவரின் தோட்டம் அழகு மலர் கூட்டம் ஆடிப்பாட நெஞ்சை தூண்டுது அன்பு பொங்கும் உள்ளம் அருள் வசந்த இல்லம் ஆண்டவரைப் புகழச் சொல்லுது தேவ ஜீவராகம் பிறந்திட ஜோதி ரூபம் நாளும் முழங்கிட ஆடிப்பாடுவோம் வையகமே வானகமே விண் ஒளிரும் மீனினமே சூரியனே சந்திரனே திரண்டு வாருங்கள் 1. ஆறுகளே அருவிகளே வாருங்கள் நன்கு ஆர்ப்பரிக்கும் கடலினமே வணங்குங்கள் நானிலமே நவமணியே கூடுங்கள் (2) நம் நாயகனாம் இயேசுவையே பாடுங்கள் 2. மாநிலமே மேனிலமே நில்லுங்கள் நீல மலர் முடியே மனுக்குலமே கேளுங்கள் பறவைகளே பறவைகளே வாருங்கள் (2) நம் பரம பிதா இரக்கத்தையே போற்றுங்கள்
Thursday, 7 January 2021
Devan illai Entru தேவன் இல்லையென்று
Devan illai Entruதேவன் இல்லையென்று மதிகேடன் சொல்லுகின்றான் உண்மை எங்குமில்லை இன்று நன்மை செய்வாரில்லை 1. தன்னையும் தேடுபவன் மண்ணிலே உண்டோ என்று வல்லவர் கண்ணோக்கினார் நல்லவர் யாருமில்லை 2. பாவம் செய்பவர்கள் தேவனை தொழுவதில்லை கர்த்தரோ நீதிமானின் சந்ததிடியோடிருப்பார் 3. தேவாதி தேவனையே தொழுபவர் மறைவதில்லை பரலோகில் பொக்கிஷமாய் நம்மையே சேர்த்துக்கொள்வார் 4. பாவ உலகினில் பரிசுத்தராய் வந்தார் பாவங்கள் போக்கிடவே பரிசுத்தர் பலியானார்
Sunday, 3 January 2021
Innor Aandu Mutrumai இன்னோர் ஆண்டு முற்றுமாய்
Innor Aandu Mutrumai1. இன்னோர் ஆண்டு முற்றுமாய் எங்களை மகா அன்பாய் காத்து வந்தீர் இயேசுவே உம்மைத் துதி செய்வோமே. 2. நீரே இந்த ஆண்டிலும் எங்கள் துணையாயிரும் எந்தத் துன்பம் தாழ்விலும் கூடத் தங்கியருளும். 3. யாரேனும் இவ்வாண்டினில் சாவின் பள்ளத்தாக்கினில் செல்லின் உந்தன் கோலாலே தேற்றும் நல்ல மேய்ப்பரே. 4. நாங்கள் உந்தன் தாசராய் தூய்மை பக்தி உள்ளோராய் சாமட்டும் நிலைக்க நீர் காத்து கிரீடம் ஈகுவீர். 5. ஏக கர்த்தராம் நீரே மன்னர் மன்னன் எனவே என்றும் உம்மைப் போற்றுவோம் உந்தன் வீட்டில் வாழுவோம்.
Saturday, 2 January 2021
Kelungal Tharapadum கேளுங்கள் தரப்படும்
Kelungal Tharapadum கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்குமென்றார் இயேசு தேடுங்கள் கிடைக்குமென்றார் பெத்தலேகேம் நகரில் மாட்டு தொழுவமதில் பிறந்தார் பரமப்பிதா சூசை கன்னி மரியின் மடியில் தவழ்ந்தார் ஏசுப்பிதா (2) --- கேளுங்கள் ஆறுவயதினில் ஆரம்ப பள்ளியில் கல்வி பயின்றாரே ஆகமங்கள் ஐம்பதாறினையும் ஐயம் தீர உணர்ந்தார் இயற்கை உலகமே தூய்மையானதென இயேசு நினைத்தாரே எல்லா உயிர்களும் தன் உயிர் எனவே பேசி மகிழ்ந்தாரே --- கேளுங்கள் ஜெருசலேம் நகரில் பஸ்கா பண்டிகைக்கு பரமர் போனாரே பனிரெண்டு வயது நிரம்பிய இயேசு கேள்விகள் கேட்டாரே இயேசுவின் கேள்வியில் ஆலய குருக்கள் ஆனந்தம் ஆனாரே இளமை செய்த திறமையில் பஸ்கா பெருமையை வளர்த்தாரே இளமை பருவமதில் எளிய வாழ்க்கையில் இருப்பிடம் ஆனாரே இந்த வேளையில் இயேசுவின் தந்தை சூசையும் மறைந்தாரே தந்தையார் செய்த தச்சு தொழிலையே தனயனும் செய்தாரே தங்க உழவர்கள் உழுதிட கலப்பைகள் செய்து கொடுத்தாரே (2) --- கேளுங்கள் நிலங்களை உழுவது போல் உள்ளத்தை உழுங்கள் என்று உலகப்பிதா சொன்னபோது உழவர்கள் தொழிலாளர் ஊராரின் எண்ணமதில் இயேசு ஒன்றாக பதிந்து விட்டார் (2) அன்பு குழந்தைகள் அருகில் இருப்பதே ஆண்டவன் தொண்டு என்றார் இயேசு (2) --- கேளுங்கள் முப்பதாம் வயதினில் யோர்தான் ஆற்றங்கரையினில் சென்றாரே யோவான் என்ற ஞானியின் அன்பில் நோன்புகள் ஏற்றாரே ஞானஸ்நானமும் பெற்றாரே துன்பத்தை அகற்றி இன்பமாய் வாழ வழி பல சொன்னாரே இயேசு நண்பனாம் யூதாஸ் நன்றியை மறந்து காட்டிக் கொடுத்தானே முப்பது காசுக்காகவே (2) --- கேளுங்கள் ஜனகரீம் என்ற நீதிமன்றத்தில் இயேசு நின்றாரே தெய்வ நிந்தனை செய்பவர் என்ற பழியை சுமந்தாரே சிகப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே இயேசுவை சிலுவையில் அறைந்தாரே மரித்த இயேசுவும் மூன்றாம் நாளிலே உயிரோடு எழுந்தாரே பன்னிரண்டு சீடர் நடுவினில் தோன்றி ஆசிகள் அளித்தாரே உலகத்தின் முடிவில் மறுபடி தோன்றி நம்மையும் காப்பாரே --- கேளுங்கள்
Friday, 1 January 2021
Yesu Thane Athisaya Theivam இயேசு தானே அதிசய தெய்வம்
Yesu Thane Athisaya Theivamஇயேசு தானே அதிசய தெய்வம் என்றும் ஜீவிக்கிறார் நம் தெய்வம் 1. அதிசயமே அவர் அவதாரம் அதிலும் இனிமை அவர் உபகாரம் அவரைத் தெய்வமாய் கொள்வதே பாக்கியம் அவரில் நிலைத்து நிற்பதே சிலாக்கியம் — இயேசு 2. இருவர் ஒருமித்து அவர் நாமத்திலே இருந்தால் வருவார் இருவர் மத்தியிலே அந்தரங்கத்தில் அழுது நீ ஜெபித்தால் அவர் கரத்தால் முகம் தொட்டு துடைப்பார் — இயேசு 3. மனிதன் மறு பிறப்படைவதவசியம் மரித்த இயேசுவால் அடையும் இரகசியம் மறையும் முன்னே மகிபனைத் தேடு இறைவனோடு பரலோகம் சேரு — இயேசு 4. ஆவியினால் அறிந்திடும் தெய்வம் பாவிகளை நேசிக்கும் தெய்வம் ஆவியோடு உண்மையாய் தொழுதால் தேவசாயலாய் மாறி நீ மகிழ்வாய் — இயேசு
Ananthame Jeya Jeya ஆனந்தமே ஜெயா ஜெயா
Ananthame Jeya Jeyaஆனந்தமே ஜெயா ஜெயா அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம் ஞானரட்சகர் நாதர் நமை – இந்த நாள்வரை ஞாலமதினில் காத்தார் – புகழ் – ஆனந்தமே 1. சங்கு கனம் வளர் செங்கோலரசிவை தளராதுள கிறிஸ்தானவராம் எங்கள் ரட்சகரேசு நமை – வெகு இரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால் – புகழ் – ஆனந்தமே 2. முந்து வருட மதினில் மனுடரில் வெகு மோசகஸ்திகள் தனிலேயுழல தந்து நமக்குயிருடையுணவும் – வெகு தயவுடன் இயேசு தற்காத்ததினால் – புகழ் – ஆனந்தமே 3. பஞ்சம் பசிக்கும் பட்டயத்துக்கும் வெகு கொடும் பாழ் கொள்ளை நோய் விஷதோஷத்திற்கும் தஞ்ச ரட்சகர் தவிர்த்து நமை – இத் தரை தனில் குறை தணித்தாற்றியதால் – புகழ் – ஆனந்தமே