அரவணைக்கும் இயேசு
அன்பாய் அழைக்கிறார்
ஆதரிக்கும் இயேசு
அன்பாய் அழைக்கிறார்
1. தாங்கா துயரம் தாக்கும் நேரம்
தயங்காமல் வந்திடுவார்
இன்னல் நீக்கி இன்பம் நல்கி
இரக்கம் காட்டிடுவார்
2. வியாதி வருத்தம் வறுமை தாகம்
வல்லவரால் நீங்குமே
அரவணைக்கும் அன்பர் இயேசு
ஆற்றியே தேற்றிடுவார்
3. தந்தை தாயும் கைவிட்டாலும்
தாங்கி அரவணைப்பார்
உள்ளங்கையில் வரைந்த தேவன்
உன்னை உயர்த்திடுவார்