1.
வாரும் ஐயா போதகரே
வந்தெம்மிடம் தங்கியிரும்
சேரும் ஐயா பந்தியினில்
சிறியவராம் எங்களிடம்
2. ஒளிமங்கி இருளாச்சே
உத்தமனே வாரும் ஐயா
கழித்திரவு காத்திருப்போம்
காதலனே கருணை செய்வாய்
3. நான் இருப்பேன் நடுவில் என்றாய்
நாயன் உன் நாமம் நமஸ்கரிக்க
தாமதமேன் தயை புரிய
தற்பரனே நலம் தருவாய்
4. உன்றன் மனை திருச்சபையை
உலக மெங்கும் வளர்த்திடுவாய்
பந்தமறப் பரிகரித்தே
பாக்கியம் அளித் தாண்டருள்வாய்
Thursday, 2 September 2021
Varum Ayya Pothagarae வாரும் ஐயா போதகரே
Wednesday, 1 September 2021
Kartharin Satham Vallamaiullathu கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது
கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது
கர்த்தரின் சத்தம் மகத்துவமுள்ளது
திரண்ட தண்ணீர்மேல் ஜலப்பிரவாகம் மேல்
தற்பரன் முழங்குகின்றார் அல்லேலூயா
1. பலவான்களின் புத்திரரே
பரிசுத்த அலங்காரமாய்
கனம் வல்லமை மகிமை
கர்த்தருக்கே செலுத்திடுங்கள்
பிதாகுமாரன் பரிசுத்தாவியின்
புது ஆசீர்வாதம் பெருக – கர்த்தரின்
2. கேதுரு மரங்களையும்
லீபனோனின் மரங்களையும்
கர்த்தரின் வலிய சத்தம்
கோரமாக முறிக்கின்றது
சேனை அதிபன் நமது முன்னிலை
ஜெய வீரனாகச் செல்கிறார் – கர்த்தரின்
3. அக்கினி ஜூவாலைகளை
அவர் சத்தம் பிளக்கின்றது
காதேஸ் வனாந்திரத்தை
கர்த்தர் சத்தம் அதிரப் பண்ணும்
ராஜாவாகவே கர்த்தர் வீற்றிருப்பார்
ராஜரீகமெங்கும் ஜொலிக்கும் – கர்த்தரின்
4. பெண்மான்கள் ஈனும்படி
பலத்த கிரியை செய்திடும்
காட்டையும் வெளியாக்கும்
கர்த்தரின் வலிய சத்தம்
பெலன் கொடுத்து சமாதானமீந்து
பரன் எம்மை ஆசீர்வதிப்பார் – கர்த்தரின்
Tuesday, 31 August 2021
Puthu Kirubai Alithidume புது கிருபை அளித்திடுமே
புது கிருபை அளித்திடுமே
புகலிடமும் தந்திடுமே
புது ஜீவன் புது பெலனும்
எந்தன் இயேசுவே தந்திடுமே
1. பரதேசியாகத் திரிந்தேனையா
பாசமாய்த் தேடினீரே
இதுகாறும் காத்தீர் இனியும் நடத்தும்
இயேசுவே இரட்சகனே
2. ஆண்டாண்டு காலங்கள் அறியாமல் போனேன்
ஆண்டவர் அன்பினையே
வேண்டாதவைகளை விலக்கிடவே
உந்தன் வழிதனை போதியுமே
3. உம் சித்தம் செய்ய உம்மைப் போல் மாற
வல்லமை தந்திடுமே
இம்மட்டும் காத்த இம்மானுவேலே
இனியும் நடத்திடுமே
Monday, 30 August 2021
Aatharam Neerthanaiya ஆதாரம் நீர்தானையா
ஆதாரம் நீர்தானையா
காலங்கள் மாற கவலைகள் தீர
காரணம் நீர்தானையா
1. உலகத்தில் என்னென்ன ஜெயங்கள்
கண்டேன் நான் இந்நாள் வரை
ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை
குழப்பம் தான் நிறைகின்றது– ஆதாரம்
2. குடும்பத்தில் குழப்பங்கள் இல்லை
பணக்கஷ்டம் ஒன்றுமே இல்லை
ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை
அமைதிதான் கலைகின்றது – ஆதாரம்
3. உந்தனின் சாட்சியாய் வாழ
உள்ளத்தில் வெகுநாளாய் ஆசை
உம்மிடம் வந்தேன் உள்ளத்தைத் தந்தேன்
சாட்சியாய் வாழ்ந்திடுவேன் – ஆதாரம்
Sunday, 29 August 2021
Yesu Unnai Alaikirar இயேசு உன்னை அழைக்கிறார்
இயேசு உன்னை
அழைக்கிறார்
இன்ப தொனி
பின் வாராயோ
இன்னல் தீர்க்க
வல்லவரை
இன்று நீ
நம்பிடுவாய்
1. வருந்தி
பாரங்கள் சுமந்த நீ
விரும்பி
சிலுவை நோக்கியே பார்
அருமை ஆண்டவர்
உனக்காக
சிறுமை அடைந்து
உயிர் தந்தாரே
2. உன் கையில்
நீ செய்த பாவத்திற்காய்
தன் கையில்
ஆணிகள் பாய்ந்திடவே
முள் முடி
சூடினார் உன் வினைக்காய்
மன்னிப்பு
இரட்சண்யம் உனக்களிப்பார்
3. மனந்திரும்பி
நீ மாறினாலோ
மறுபிறப்பை
நீ கண்டடைவாய்
இயேசுவை உன்
ஆத்ம இரட்சகராய்
ஏற்றுக்கொள்
கிடைக்கும் சமாதானமே
4. வல்லமை
உண்டவர் இரத்தத்திலே
வியாதியின்
வேரும் கூரும் முறியும்
கர்த்தரின்
காயங்கள் தழும்புகள்
சுத்தமாய்
உன்னையும் குணமாக்கிடும்
5. சத்திய
பரனே அழைக்கிறார்
நித்திய ஜீவனை
ஈந்திடுவார்
இயேசுவாலாகாத
தொன்றுமில்லை
இப்போதும் உன் தேவை வேண்டிக் கொள்வாய்
Saturday, 28 August 2021
Vaana Pitha Thantha vethathilae வான பிதா தந்த வேதத்திலே
1. வான பிதா தந்த வேதத்திலே
நான் மகிழ்வேன்
அன்பு சொல்லுகிறார்
இவ்வித ஆச்சர்யம்
யாவினுள்ளே
ஆச்சர்யம் யேசென்னை நேசிக்கிறார்
ஆனந்தம் யேசு நேசிக்கிறார்
நேசிக்கிறார் நேசிக்கிறார்
ஆனந்தம் இயேசு நேசிக்கிறார்
நேசிக்கிறார்
என்னையும்.
2. நான் மறந்தோடினும்
நேசித்தென்னைச்
சென்ற இடம் வந்து தேடுகிறார்
மீண்டும் நினைந்தவர் நேசந்தன்னை
ஆண்டவர் அண்டுவேன் நேசிக்கிறார்
3. நேசிக்கிறார் நானும் நேசிக்கிறேன்
மீட்கவந் தாத்துமம்
நேசிக்கிறார்
சாவு மரத்தில்
அந் நேசங்கண்டேன்
நிச்சயம் யேசென்னை நேசிக்கிறார்
4. நிச்சயத்தால் இன்ப ஓய்வு பெற்றேன்
நம்பும் என் யேசென்னை
வாழ்விக்கிறார்
யேசென்னை நேசிக்கிறார்
என்றேன் நான்
சாத்தான் நில்லா தஞ்சி ஓடக் கண்டேன்
Vanthaalum Yesuvae Vaarumithil வந்தாளும் இயேசுவே வாருமிதில்
வந்தாளும் இயேசுவே வாருமிதில் – தேவ
மைந்தர்கள் கூடுமிந் நேரமிதில்
1.பத்மு தீவில் பரிசுத்த நாளில் வந்த வண்ணமே
சத்துருக்கள் கூட்டமெல்லாம் சக்தியற்றுச் சோரவே
இத்தினத்தில் இங்கு வந்திடும் – தேவா
2.நல்வழியை நாடிடாமல் ஓடும் நரர் யாவர்க்கும்
கல்வாரியின் அன்பையின்று கர்த்தனே நீர் காட்டியே
நற்குணம் அவர்க்கு நல்கிடும் – தேவா
3.சக்தியில்லை எங்களுக்கு சாம்பலும் தூசியும்
கர்த்தனே கருணை கூர்ந்து தந்திடும் சர்வாயுதம்
புத்தியாக யுத்தம் செய்திட – தேவா
4.என்னை நோக்கிக் கூப்பிடில் அளித்திடுவேன் உத்தரம்
பின்னும் நீ அறிந்திடாத வல்லமைகள்
காட்டுவேன்
என்றவா இந்நேரம் வாருமே – தேவா
5.சதா காலங்களிலும் இருப்பேனுங்கள் கூடவே
சத்துருவின் வல்லமைகள் ஒன்றும் மேற்கொள்ளாதென்றீர்
ஆதலாலனந்த ஸ்தோத்திரம் – தேவா