Saturday, 3 April 2021
koor Aani Thegam Paya கூர் ஆணி தேகம் பாய
koor Aani Thegam Paya1. கூர் ஆணி தேகம் பாய மா வேதனைப்பட்டார் பிதாவே இவர்கட்கு மன்னிப்பீயும் என்றார். 2. தம் ரத்தம் சிந்தினோரை நல் மீட்பர் நிந்தியார் மா தெய்வ நேசத்தோடு இவ்வாறு ஜெபித்தார். 3. எனக்கே அவ்வுருக்கம் எனக்கே அச்செபம் அவ்வித மன்னிப்பையே எனக்கும் அருளும். 4. நீர் சிலுவையில் சாக செய்ததென் அகந்தை கடாவினேன் இயேசுவே நானுங் கூர் ஆணியை. 5. உம் சாந்தக் கண்டிதத்தை நான் நித்தம் இகழ்ந்தேன் எனக்கும் மன்னிப்பீயும் எண்ணாமல் நான் செய்தேன். 6. ஆ இன்ப நேச ஆழி ஆ திவ்விய உருக்கம் நிந்திப்போர் அறியாமல் செய் பாவம் மன்னியும்.
Saturday, 20 March 2021
Karthave Ummai Nithame கர்த்தாவே உம்மை நித்தமே
1. கர்த்தாவே உம்மை நித்தமே
துதித்துப் போற்றுவேன்
எல்லோர் முன்னும் நான் உம்மையே
அறிக்கை பண்ணுவேன்
2. எவ்வித பாக்கியங்களும்
உம்மாலேதான் உண்டே
உண்டான எந்த நன்மைக்கும்
ஊற்றானவர் நீரே
3. இக்கட்டில் நாங்கள்
கூப்பிட்டால்
நீர் கேட்டிரங்குவீர்
எங்களைச் சுத்த தயவால்
ரட்சித்துத் தாங்குவீர்
4. அநந்த வாழ்வையும் இனி
கொடுத்தருள்வீரே
அடியாருக்கு நற்கதி
அப்போதுண்டாகுமே
5. ஆ களிகூர்ந்து பூரித்து
மகிழ் என் உள்ளமே
பராபரன் தான் உனது
அநந்த செல்வமே
6. அவர் உன் பங்கு உன் பலம்
உன் கேடகம் நன்றாய்த்
திடப்படுத்தும் உன் திடம்
நீ கைவிடப்படாய்
Sunday, 14 March 2021
Marithaare Kiristhesu மரித்தாரே கிறிஸ்தேசு
Marithaare Kiristhesu மரித்தாரே கிறிஸ்தேசு உனக்காகப் பாவி 1. திரித்துவத் துதித்தோர் தெய்வீக சேயே தீன தயாளத்வ மனுவேலே பாராய் - மரித்தாரே 2. லோகத்தின் பாவத்தைத் தேகத்தில் சுமந்தே லோலாயமாய்ச் சிலுவையிலே பாராய் - மரித்தாரே 3. மகத்தான தண்டனை நிவிர்த்திப்பதற்கே மா பாடுபட்டுத் தரித்ததே பாராய் - மரித்தாரே 4. மன்னிப்புண்டாக்கவே மத்யஸ்தராக மாவாதைக்குள்ளானார் தாமே நீ பாராய் – மரித்தாரே
Wednesday, 10 March 2021
Mulmudi Nogutho Devane முள்முடி நோகுதோ தேவனே
Mulmudi Nogutho Devane1. முள்முடி நோகுதோ தேவனே இரத்தமும் வடியுதோ சிரசினில் இவையாவும் எனக்காக தேவனே முழங்காலில் நிற்கிறேன் நாதனே முள்முடி நோகுதோ இரத்தமும் வடியுதோ சிரசினில் இவையாவும் எனக்காக முழங்காலில் நிற்கிறேன் நாதனே 2. கைகளில் ஆணியா குத்தினர் களைத்ததோ கைகளும் ஏசுவே சாட்டையால் முதுகில் அடித்தார் சாட்டையும் ராஜனை அடித்ததோ 3. தாகத்துக்கு காடியா தந்தனர் தண்ணீரை படைத்தவர் நீரன்றோ கண்ணீரும் கண்களில் கொட்டுதோ துடைப்பவர் யாரங்கும் இல்லையோ 4. தோளினில் சிலுவையை சுமந்தீரோ தோள்களும் தாங்குதோ அப்பனே முட்களும் கால்களில் குத்துதோ முட்களை படைத்தவர் நீரன்றோ
Sunday, 28 February 2021
Maasatra Theiva Namathai மாசற்ற தெய்வ நாமத்தை
Maasatra Theiva Namathai1.மாசற்ற தெய்வ நாமத்தை துதி என் நெஞ்சமே இரக்கம் செய்த கர்த்தரை துதி என் உள்ளமே 2.உன் பாதங்கள் யாவையும் நிவிர்த்தி செய்கிறார் உன் ரோகங்கள் அனைத்தையும் பரிகரிக்கிறார். 3.நீ மாண்டுபோகும் பொழுது உன் ஜீவனை மீட்பார் நிறைந்த அன்பால் உனக்கு கிரீடம் சூட்டுவார். 4.நன்மைகளால் உன் மனதை திருப்தியாக்கினார் அன்பாய் உன் ஆயுள் காலத்தை நீடிக்கப்பண்ணினார். 5.எந்நாளும் இந்த நன்மையை என் ஆத்துமாவே நீ மறந்திடாமல் கர்த்தரை வணக்கமாய்த் துதி.
Saturday, 27 February 2021
Kartharai Naan Ekkaalamum கர்த்தரை நான் எக்காலமும்
Kartharai Naan Ekkaalamumகர்த்தரை நான் எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன் அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும் 1.கர்த்தருக்குள் எந்தன் ஆத்துமாவும் களித்து மேன்மை பாராட்டிடுதே ஒருமித்தே நாம் உயர்த்திடுவோமே கருத்தாய் அவர் நாமமே 2.தூய பரன் முகம் நோக்கிடுவார் சூரிய சோபையாய் மாறிடுவார் ருசிக்க இன்பமே இயேசுவின் அன்பே சுகிக்க நல்லவரே 3.ஜீவனை யீந்தார் தம் சாவினாலே வேதனை நீக்கினார் நோவினாலே அற்புதமாய் எந்தன் ஜீவியமதையே தற்பரன் மாற்றுகிறார் 4. தேற்றி அப்போஸ்தல தூதுகளால் மாற்றிடுவார் அவர் ரூபமதாய் ஊற்றிடுவார் புது ஜீவன் எந்நாளும் ஏற்றுவார் ஜெயக்கொடியே 5.அக்கினி ஊடே நடந்திடினும் விக்கினமின்றியே நான் துலங்க ஆக்குவார்பொன்னிலும் என்விசுவாசம் மிக்கதோர் மகிமையாய் 6.சீயோனே உன் பெலன் தரித்திடுவாய் வீற்றிடுவாய் எழுந் தெருசலேமே உன் துயர் நீக்கிடும் இன்ப மணாளன் வந்திடும் வேளையிதே
Thursday, 25 February 2021
En Nesar Yesuvai என் நேசர் இயேசுவை
En Nesar Yesuvaiஎன் நேசர் இயேசுவை நான் என்றும் பாடுவேன் என் ஆத்துமாவை நித்தம் நேசிக்கின்றவர் என் நேசர் லிலியீலும் வென்மையானவர் என் வாழ்வில் நறுமணமீந்தவர். 1. பெலனற்று போகையில் என் பெலனவரே இன்ப துன்ப நேரத்தில் என் நண்பரவரே பொற்றள வீதியில் பாடி மகிழ என் நேசரேசு மீட்டுக்கொள்வாரே 2. கடும் புயல் சீறிடும் அலைகள் மோதிடும் கண்ணுக்கெட்டா கரைதனில் உள்ளம் நாடிடும் பொற்கரம் நீட்டி என் கரம் கொடுப்பேன் என் நேசரேசு மீட்டுக்கொள்வாரே 3. எட்டியாய் கசந்திட்ட என் வாழ்வு இனித்திட எத்தனாய் அலைந்திடாது நித்தம் பின் செல்ல ஏந்திட்டார் பொற்கரத்தில் ஆவலாய் என்னை எந்நாளும் இன்ப துதிகள் பாடவே
Subscribe to:
Posts (Atom)