Wednesday, 10 March 2021

Mulmudi Nogutho Devane முள்முடி நோகுதோ தேவனே


 Mulmudi Nogutho Devane

1. முள்முடி நோகுதோ தேவனே இரத்தமும் வடியுதோ சிரசினில் இவையாவும் எனக்காக தேவனே முழங்காலில் நிற்கிறேன் நாதனே முள்முடி நோகுதோ இரத்தமும் வடியுதோ சிரசினில் இவையாவும் எனக்காக முழங்காலில் நிற்கிறேன் நாதனே 2. கைகளில் ஆணியா குத்தினர் களைத்ததோ கைகளும் ஏசுவே சாட்டையால் முதுகில் அடித்தார் சாட்டையும் ராஜனை அடித்ததோ 3. தாகத்துக்கு காடியா தந்தனர் தண்ணீரை படைத்தவர் நீரன்றோ கண்ணீரும் கண்களில் கொட்டுதோ துடைப்பவர் யாரங்கும் இல்லையோ 4. தோளினில் சிலுவையை சுமந்தீரோ தோள்களும் தாங்குதோ அப்பனே முட்களும் கால்களில் குத்துதோ முட்களை படைத்தவர் நீரன்றோ

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.