Saturday, 3 April 2021

koor Aani Thegam Paya கூர் ஆணி தேகம் பாய


 koor Aani Thegam Paya

1. கூர் ஆணி தேகம் பாய மா வேதனைப்பட்டார் பிதாவே இவர்கட்கு மன்னிப்பீயும் என்றார். 2. தம் ரத்தம் சிந்தினோரை நல் மீட்பர் நிந்தியார் மா தெய்வ நேசத்தோடு இவ்வாறு ஜெபித்தார். 3. எனக்கே அவ்வுருக்கம் எனக்கே அச்செபம் அவ்வித மன்னிப்பையே எனக்கும் அருளும். 4. நீர் சிலுவையில் சாக செய்ததென் அகந்தை கடாவினேன் இயேசுவே நானுங் கூர் ஆணியை. 5. உம் சாந்தக் கண்டிதத்தை நான் நித்தம் இகழ்ந்தேன் எனக்கும் மன்னிப்பீயும் எண்ணாமல் நான் செய்தேன். 6. ஆ இன்ப நேச ஆழி ஆ திவ்விய உருக்கம் நிந்திப்போர் அறியாமல் செய் பாவம் மன்னியும்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.