Friday, 16 April 2021

Annai Anbilum அன்னை அன்பிலும்


 Annai Anbilum

அன்னை அன்பிலும் விலை உன் இயேசுவின் தூய அன்பே தன்னை பலியாய்த் தந்தவர் உன்னை விசாரிப்பார் உன் இயேசுவின் தூய அன்பே 1. பாவச் சேற்றினில் வீழ்ந்தோரை பரன் சுமந்து மீட்டாரே தம் நாமத்தை நீ நம்பினால் தளர்ந்திடாதே வா 2. மாய லோகத்தின் வேஷமே மறைந்திடும் பொய் நாசமே மேலான நல் சந்தோஷமே மெய் தேவன் ஈவாரே 3. தேவ ராஜ்ஜிய பாக்கியமே தினம் அதை நீ தேடாயோ உன் தேவனை சந்தித்திட உன் ஆயத்தம் எங்கே 4. ஜீவ புத்தகம் விண்ணிலே தேவன் திறந்து நோக்குவார் உன் பேர் அதில் உண்டோ இன்றே உன்னை நிதானிப்பாய் 5. உந்தன் பாரங்கள் யாவையும் உன்னை விட்டே அகற்றுவார் உன் கர்த்தரால் கூடாதது உண்டோ நீ நம்பி வா

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.