Kalvari Snegam
கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை
கல்மனம் மாற்றி கரைந்தோட செய்யும் (2)
1. காலங்கள் தோறும் காவலில் உள்ளோர்
காணட்டும் உம்மை களிப்போடு இன்னமும்
குருசதின் இரத்தம் குரல் கொடுக்கட்டும் (2)
கும்பிடுவோரை குணமாக்கும் வேதம்
2. இருண்டதோர் வாழ்வில் இன்னமும் வாழ்வோர்
இனியாவது உம் திருமுகம் காண
நாதா உம் சிநேகம் பெருகட்டும் என்னில் (2)
என்னை காணுவோர் உம்மை காணட்டும்
3. அற்பமான வாழ்வு அற்புதமாய் மாற
அனைத்தையும் தந்தேன் ஆட்கொள்ளும் தேவா
நான் சிறுகவும் நீர் பெருகவும் (2)
தீபத்தின் திரியாய் எடுத்தாட்கொள்ளும்
Siluvai Oar Punitha Sinnam
சிலுவை ஓர் புனிதச் சின்னம்
ஜெகத்து ரட்சகன்
இயேசு மரித்துயிர்த்தெழுந்தார் – சிலுவை
1.கல்வாரியில் முளைத்து
ககனம் வரை தழைத்து
எல்லாத்திக்கும் கிளைத்து
இகபரத்தை இணைத்து
இல்லாரைச் செல்வராக்கும்
பொல்லாரை நல்லோராக்கும்
நல்லாயன் இயேசு சுவாமி
தோளில் சுமந்து சென்ற --- சிலுவை
2.அலகை சிரமுடைக்க
அகந்தை நினைவழிக்க
பலமயல்களகற்றப் பவக்
கடலைக் கடக்க
உலகில் உயிர்களோங்க
உன்னத வாழ்வு பெற
பலகுல மனிதரும்
பகைத்துப்பின் போற்றுகின்ற --- சிலுவை
3.யூதர்க்கிடறலான
இயேசு நாதர் சிலுவை
கிரேக்க ஞானியருக்கு
பைத்தியமச் சிலுவை
அன்பர்க் கடைக்கலமும்
தேவ பெலனும் சிலுவை
தன்னை உணர்ந்தவர்
தனிப்பெருமை சிலுவை - சிலுவை
Meetpar Yesu Kurusil
மீட்பர் இயேசு குருசில் தொங்கினாரே
மூன்றாணி மீதில் காயம் அடைந்தே (2)
1. லோகப் பாவம் தீர்க்க பலியான
தேவ ஆட்டுக் குட்டியானவர்
சொந்தமான இரத்தம் சிந்தி மீட்டு
இந்தளவாய் அன்பு கூர்ந்தவர் -எம்மில்
2. இயேசுவே கல்வாரி சிலுவையில்
ஏறி ஜீவன் தந்திராவிடில்
ஏழையான் என் பாவ பாரங்களை
எங்கு சென்று தீர்த்துக் கொள்ளுவேன் – பூவில்
3. தேவனே என்னை ஏன் கைவிட்டீரோ
என்று இயேசு கதறினாரே
பாவத்தால் பிதாவின் முகத்தையும்
பார்க்கவும் முடியவில்லையோ – அவர்
4. அன்னை தந்தை யாவரிலும் மேலாய்
அன்பு கூர்ந்தார் அண்ணல் இயேசுவே
ஆச்சரிய தேவ அன்பைப் பாட – ஆயிரம்
நாவுகள் போதுமோ – பதினாயிரம்
5. பாவ பாரம் லோகக் கவலைகள்
தாவி உன்னைச் சூழ்ந்த போதிலும்
தேடி நாடி ஓடி வந்தால் உன்னைத்
தேற்றி ஆற்றித் தாங்குவார் அவர் – உன்னை
6. கோரமாம் சிலுவைக் காட்சி கண்டால்
கல் மனமும் உருகிடுமே
மாய லோக ஆசை வஞ்சிக்குமே
மாறிடாத இயேசு போதுமே – என்றும்