Sunday, 22 March 2020

Aathmame Un Aandavarin ஆத்மமே உன் ஆண்டவரின்

Aathmame Un Aandavarin 1. ஆத்மமே உன் ஆண்டவரின் திருப்பாதம் பணிந்து மீட்பு, சுகம், ஜீவன், அருள் பெற்றதாலே துதித்து அல்லேலுயா என்றென்றைக்கும் நித்திய நாதரைப்போற்று 2. நம் பிதாக்கள் தாழ்வில் பெற்ற தயை நன்மைக்காய் துதி கோபங்கொண்டும் அருள் ஈயும் என்றும் மாறாதோர் துதி அல்லேலுயா அவர் உண்மை மா மகிமையாம் துதி 3. தந்தை போல் மா தயை உள்ளோர் நீச மண்ணோர் நம்மையே அன்பின் கரம் கொண்டு தாங்கி மாற்றார் வீழ்த்திக் காப்பாரே அல்லேலுயா இன்னும் அவர் அருள் விரிவானதே 4. என்றும் நின்றவர் சமுகம் போற்றும் தூதர் கூட்டமே நாற்றிசையும் நின்றெழுந்து பணிவர் நீர் பக்தரே அல்லேலுயா அனைவோரும் அன்பின் தெய்வம் போற்றுமே

Parir Gethsemane பாரீர் கெத்சமனே

Parir Gethsemane பாரீர் கெத்சமனே பூங்காவிலென் நேசரையே பாவியெனக்காய் வேண்டுதல் செய்திடும் சத்தம் தொனித்திடுதே 1. தேகமெல்லாம் வருந்தி சோகமடைந்தவராய் தேவாதி தேவன் ஏக சுதன் படும் பாடுகள் எனக்காயே – பாரீர் 2. அப்பா இப்பாத்திரமே நீக்கும் நின் சித்தமானால் எப்படியுமும் சித்தம் செய்ய என்னைத் தத்தம் செய்தேன் என்றாரே – பாரீர் 3. இரத்தத்தின் வேர்வையாலே மெத்தவுமே நனைந்தே இம்மானுவேலன் உள்ளமுருகியே வேண்டுதல் செய்தனரே- பாரீர் 4. மும்முறை தரை மீதே தாங்கொண்ணா வேதனையால் முன்னவன் தானே வீழ்ந்து ஜெபித்தாரே பாதகர் மீட்புறவே – பாரீர் 5. அன்பின் அருள் மொழியால் ஆறுதல் அளிப்பவர் துன்ப வேளையில் தேற்றுவாரின்றியே நொந்து அலறுகின்றார் – பாரீர் 6. என்னையும் தம்மைப் போல மாற்றும் இம்மா நேசத்தை எண்ணி யெண்ணியே உள்ளம் கனிந்து நான் என்றும் புகழ்ந்திடுவேன் – பாரீர்

Paavikku Pugalidam Yesu Ratchagar பாவிக்குப் புகலிடம் இயேசு இரட்சகர்

Paavikku Pugalidam Yesu Ratchagar பாவிக்குப் புகலிடம் இயேசு இரட்சகர் பாரினில் பலியாக மாண்டாரே பரிசுத்தரே பாவமானாரே பாரமான சிலுவை சுமந்தாரே 1. காட்டிக் கொடுத்தான் முப்பது வெள்ளிக் காசுக்காகவே கர்த்தர் இயேசுவை கொலை செய்யவே கொண்டு போனாரே கொல்கதா மலைக்கு இயேசுவை --- பாவி 2. கள்ளர் மத்தியில் ஒரு கள்ளன் போல் குற்றமற்ற கிறிஸ்தேசு தொங்கினார் பரிகாசமும் பசிதாகமும் படுங்காயமும் அடைந்தாரே --- பாவி 3. கால்கள் கைகளில் ஆணி பாய்ந்திட கிரீடம் முட்களில் பின்னி சூடிட இரத்த வெள்ளத்தில் கர்த்தர் தொங்கினார் இதைக் கானும் உள்ளம் தாங்குமோ --- பாவி 4. உலகத்தின் இரட்சகர் இயேசுவே உயிர் கொடுத்தார் உயிர்த்தெழுந்தார் தம்மை நம்பினால் உன்னைக் கைவிடார் தளராமல் நம்பி ஓடி வா --- பாவி 5. பாவ சாபங்கள் தீரா வியாதிகள் பல தோல்விகள் உந்தன் வாழ்க்கையில் கண்டு நீ மனம் கலங்குவதேன் கர்த்தர் இயேசுவண்டை ஓடி வா --- பாவி 6. வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே வாருங்கள் என்னண்டையில் என்கிறார் இளைப்பாறுதல் தரும் இயேசுவை இன்று தேடி நம்பி வா --- பாவி

Saturday, 21 March 2020

Kolkatha Mettinile கொல்கதா மேட்டினிலே

Kolkatha Mettinile 1. கொல்கதா மேட்டினிலே கொடூர பாவி எந்தனுக்காய் குற்றமில்லாத தேவகுமாரன் குருதி வடிந்தே தொங்கினார் 2. பாவ சாபங்கள் சுமந்தாரே பாவியை மீட்க பாடுபட்டார் பாவமில்லாத தேவகுமாரன் பாதகன் எனக்காய் தொங்கினார் 3. மடிந்திடும் மன்னுயிர்க்காய் மகிமை யாவும் இழந்தோராய் மாசில்லாத தேவ குமாரன் மூன்றாணி மீதினில் தொங்கினார் 4. இரத்தத்தின் பெரு வெள்ளம் ஓட இரட்சிப்பின் நதி என்னில் பாய ஆதரவில்லா தேவ குமாரன் அகோரக் காட்சியாய் தொங்கினார் 5. கல்வாரி காட்சி இதோ கண்டிடுவாயே கண் கலங்க கடின மனமும் உருகிடுமே கர்த்தரின் மாறாத அன்பினிலே 6. உள்ளமே நீ திறவாயோ உருகும் சத்தம் நீ கேளாயோ உன் கரம் பற்றி உன்னை நடத்த உன் நெஞ்சை ஆவலாய் தட்டுகிறார்

Wednesday, 18 March 2020

Kalvariyin Karunaiyithe கல்வாரியின் கருணையிதே

Kalvariyin Karunaiyithe 1. கல்வாரியின் கருணையிதே காயங்களில் காணுதே கர்த்தன் இயேசு பார் உனக்காய் கஷ்டங்கள் சகித்தாரே விலையேறப் பெற்ற திருரத்தமே -அவர் விலாவினின்று பாயுதே விலையேறப் பெற்றோனாய் உன்னை மாற்ற விலையாக ஈந்தனரே 2. பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோ இவ்வன்புக் கிணையாகுமோ அன்னையிலும் அன்பு வைத்தே தம் ஜீவனை ஈந்தாரே 3. சிந்தையிலே பாரங்களும் நிந்தைகள் ஏற்றவராய் தொங்குகின்றார் பாதகன் போல் மங்கா வாழ்வளிக்கவே 4. எந்தனுக்காய் கல்வாரியில் இந்தப் பாடுகள் பட்டீர் தந்தையே உம் அன்பினையே சிந்தித்தே சேவை செய்வேன் 5. மனுஷனை நீர் நினைக்கவும் அவனை விசாரிக்கவும் மண்ணில் அவன் எம்மாத்திரம் மன்னவா உம் தயவே

Kalvari Anbai Ennidum கல்வாரி அன்பை எண்ணிடும்

Kalvari Anbai Ennidum கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை கண்கள் கலங்கிடுதே கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால் நெஞ்சம் நெகிழ்ந்திடுதே 1. கெத்சமனே பூங்காவிலே கதறி அழும் ஓசை எத்திசையும் தொனிக்கிறதே எங்கள் மனம் திகைக்கின்றதே கண்கள் கலங்கிடுதே (2) – கல்வாரி 2. சிலுவையில் மாட்டி வதைத்தனரோ உம்மை செந்நிறம் ஆக்கினரோ அப்போதும் அவர்காய் வேண்டினீரே அன்போடு அவர்களை கண்டீரன்றோ அப்பா உம் மனம் பெரிதே (2) – கல்வாரி 3. எம்மையும் உம்மைபோல் மாற்றிடவே உம் ஜீவன் தந்தீரன்றோ என் தலை தரைமட்டும் தாழ்த்துகின்றேன் தந்து விட்டேன் அன்பின் கரங்களிலே ஏற்று என்றும் நடத்தும் (2) – கல்வாரி

Siluvaiyil Araiyunda Yesuve சிலுவையில் அறையுண்ட‌ இயேசுவே

Siluvaiyil Araiyunda Yesuve 1. சிலுவையில் அறையுண்ட‌ இயேசுவே உம்மையே நோக்கி பார்க்கிறேன் என் பாவ சுமைகளோடு உம் பாத நிழலில் நிற்கிறேன் இயேசுவே உமது இரத்தத்தால் என்னை கழுவி இன்றே உம்முடன் வான்வீட்டில் என்னையும் சேருமே 2. தந்தையே இவர்களை மன்னியும் அறியாமல் செய்தார்கள் என்றீர் மாறாத இரக்கத்தால் என்னை மன்னித்து மகிழ்ச்சியால் நிரப்புமே --- இயேசுவே 3. அம்மா இதோ உன் மகன் என்றீர் இதோ உன் தாய் என்றே நேசத்தால் அன்னையின் அன்பினில் நாளுமே என்னையும் வாழ்ந்திட செய்யுமே ---இயேசுவே 4. தாகமாய் உள்ளதே இறைவா ஏன் என்னை கை விட்டீர் என்றீரே கைவிடா நேசத்தால் எனக்கும் தாகம் மாற்றும் ஜீவநீரை தாருமே --- இயேசுவே 5. தந்தையே உமது கையில் என் ஆவியை ஒப்படைக்கின்றேன் என்னையும் உமது கரத்தில் முற்றிலும் கையளிக்கின்றேன் --- இயேசுவே