Niyaaya Theerpu Naalana
நியாய தீர்ப்பு நாளான அந்த நாள்
மகா பெரிய நாள் இந்த பூவிலுள்ளோர்
அனைவரும் நடுங்கும் நாள் --- அந்த நாள்
1. நீதியும் அநீதியும் பிரிக்கப்படுமே அவரவர்
ஜீவனும் ஆக்கினையும் அடைந்திடவே
2. சிறியவரும் பெரியவரும் ஏகமாய் நிற்க அங்கு
தங்கள் தங்கள் கிரியைகளின் பங்கைப் பெற்றிட
3. வலது புறத்தில் நிற்போரேல்லாம் ஆசி பெற்றிட அன்று
இடது புறத்தில் நிற்போரேல்லாம் சபிக்கவேப் பட
4. இம்மையிலே இயேசுவுக்காய் ஜீவிப்பாயானால் திட்டம் நன்மையாலே உன்னை அவர் நிரப்பிடுவாரே
Immanuvelin Ratha Ootratho
இம்மானுவேலின் இரத்த ஊற்றதோ
என் பாவம் போக்கும் ஜீவ ஊற்றதோ
அல்லேலூயா பாரதோ கல்வாரியிலே அதோ
ஐந்தாறு கூடி ஓடுது
அன்பின் இன்ப வெள்ளம் பெருகுது (2)
1. பாவி என்னில் கொண்ட தேவ அன்பின் அகலமே
நீளம் ஆழம் உயரம் இன்னும் வளர்ந்து செல்லவே
2. பாவியான கள்ளனும் மா ஊற்றில் மூழ்கினான்
பாவ மன்னிப் பானந்தமும் கண்டு பூரித்தான்
3. ஆவியில் நிறைத்து தேவ சாயலாக்கினார்
தூய ரத்தத்தால் கழுவி சுத்தமாக்கினார்
4. பிசாசு உலகம் மாம்சம் மூன்றும் ஜெயித்த ரத்தமே
பின்னடையா சிலுவை கொடி உயர்த்துவோம் நாமே
En Maeipparaai Yesu
என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்ற போது
என் வாழ்விலே குறைகள் என்பது ஏது
1. என்னை அவர் பசும்புல் பூமியிலே
எந்நேரமும் நடத்திடும் போதினிலே
என்றும் இன்பம் ஆகா என்றும் இன்பம்
ஆகா என்றென்றும் இன்பமல்லவா
2. என்னோடவர் நடந்திடும் போதினிலே
எங்கே இருள் சூழ்ந்திடும் பாதையிலே
எங்கும் ஒளி ஆகா எங்கும் ஒளி
ஆகா எங்கெங்கும் ஒளியல்லவா
3. என்னையவர் அன்பால் நிரப்பியதால்
எல்லோருக்கும் நண்பனாய் ஆக்கியதால்
என் உள்ளமே ஆகா என் தேவனை
ஆகா எந்நாளும் புகழ்ந்திடுமே