Immanuvelin Ratha Ootratho
இம்மானுவேலின் இரத்த ஊற்றதோ
என் பாவம் போக்கும் ஜீவ ஊற்றதோ
அல்லேலூயா பாரதோ கல்வாரியிலே அதோ
ஐந்தாறு கூடி ஓடுது
அன்பின் இன்ப வெள்ளம் பெருகுது (2)
1. பாவி என்னில் கொண்ட தேவ அன்பின் அகலமே
நீளம் ஆழம் உயரம் இன்னும் வளர்ந்து செல்லவே
2. பாவியான கள்ளனும் மா ஊற்றில் மூழ்கினான்
பாவ மன்னிப் பானந்தமும் கண்டு பூரித்தான்
3. ஆவியில் நிறைத்து தேவ சாயலாக்கினார்
தூய ரத்தத்தால் கழுவி சுத்தமாக்கினார்
4. பிசாசு உலகம் மாம்சம் மூன்றும் ஜெயித்த ரத்தமே
பின்னடையா சிலுவை கொடி உயர்த்துவோம் நாமே
En Maeipparaai Yesu
என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்ற போது
என் வாழ்விலே குறைகள் என்பது ஏது
1. என்னை அவர் பசும்புல் பூமியிலே
எந்நேரமும் நடத்திடும் போதினிலே
என்றும் இன்பம் ஆகா என்றும் இன்பம்
ஆகா என்றென்றும் இன்பமல்லவா
2. என்னோடவர் நடந்திடும் போதினிலே
எங்கே இருள் சூழ்ந்திடும் பாதையிலே
எங்கும் ஒளி ஆகா எங்கும் ஒளி
ஆகா எங்கெங்கும் ஒளியல்லவா
3. என்னையவர் அன்பால் நிரப்பியதால்
எல்லோருக்கும் நண்பனாய் ஆக்கியதால்
என் உள்ளமே ஆகா என் தேவனை
ஆகா எந்நாளும் புகழ்ந்திடுமே
Aayiram Naavugal Pothaa
ஆயிரம் நாவுகள் போதா
ஆண்டவா உந்தனை பாட
கணக்கில்லா நன்மைகள் செய்தீர்
கர்த்தா உம்மை போற்றிப் பாட
1.காலமெல்லாம் உந்தன் அன்பால்
கரம் பிடித்தென்னை நடத்தி
காத்த உம் கிருபையை நினைத்தே
கர்த்தா உம்மைப் போற்றிப் பாட --- ஆயிரம்
2. அலைமோதி ஆடும் படகாய்
அலைந்த என்னை நீர் கண்டீர்
ஆணிகள் பாய்ந்த உம் கைகள்
ஆண்டு நடத்துமே தேவா --- ஆயிரம்
3. வானமும் பூமி ஆழ்கடலும்
வல்லவா நீரே என சொல்ல
வல்ல நல் தேவா உம் பாதம்
வந்தேன் இயேசையா நான் ஏழை --- ஆயிரம்
4. உன்னதர் உம் வாக்கை நம்பி
உம்மோடு என்றும் நான் வாழ
ஊற்றும் உம் உன்னத பெலத்தை
உம் சித்தம் செய்திடுவேன் நான் --- ஆயிரம்