En Maeipparaai Yesu
என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்ற போது
என் வாழ்விலே குறைகள் என்பது ஏது
1. என்னை அவர் பசும்புல் பூமியிலே
எந்நேரமும் நடத்திடும் போதினிலே
என்றும் இன்பம் ஆகா என்றும் இன்பம்
ஆகா என்றென்றும் இன்பமல்லவா
2. என்னோடவர் நடந்திடும் போதினிலே
எங்கே இருள் சூழ்ந்திடும் பாதையிலே
எங்கும் ஒளி ஆகா எங்கும் ஒளி
ஆகா எங்கெங்கும் ஒளியல்லவா
3. என்னையவர் அன்பால் நிரப்பியதால்
எல்லோருக்கும் நண்பனாய் ஆக்கியதால்
என் உள்ளமே ஆகா என் தேவனை
ஆகா எந்நாளும் புகழ்ந்திடுமே
Aayiram Naavugal Pothaa
ஆயிரம் நாவுகள் போதா
ஆண்டவா உந்தனை பாட
கணக்கில்லா நன்மைகள் செய்தீர்
கர்த்தா உம்மை போற்றிப் பாட
1.காலமெல்லாம் உந்தன் அன்பால்
கரம் பிடித்தென்னை நடத்தி
காத்த உம் கிருபையை நினைத்தே
கர்த்தா உம்மைப் போற்றிப் பாட --- ஆயிரம்
2. அலைமோதி ஆடும் படகாய்
அலைந்த என்னை நீர் கண்டீர்
ஆணிகள் பாய்ந்த உம் கைகள்
ஆண்டு நடத்துமே தேவா --- ஆயிரம்
3. வானமும் பூமி ஆழ்கடலும்
வல்லவா நீரே என சொல்ல
வல்ல நல் தேவா உம் பாதம்
வந்தேன் இயேசையா நான் ஏழை --- ஆயிரம்
4. உன்னதர் உம் வாக்கை நம்பி
உம்மோடு என்றும் நான் வாழ
ஊற்றும் உம் உன்னத பெலத்தை
உம் சித்தம் செய்திடுவேன் நான் --- ஆயிரம்
Kartharaiye Thuthipaen
கர்த்தரையே துதிப்பேன்
காலமெல்லாம் துதிப்பேன்
வல்லவர் நல்லவர் கிருபையுள்ளவர்
என்றே பாடுவேன் – நான்
1. நெருக்கத்திலே கர்த்தரை
நோக்கி கதறி கூப்பிட்டேன்
நெருங்கி வந்து குரலைக் கேட்டு
விடுதலை கொடுத்தார் --- கர்த்தரையே
2. எனக்குதவும் கர்த்தர் எனது
நடுவில் இருக்கிறார்
எதிரியான அலகையை நான்
எதிர்த்து வென்றிடுவேன்--- கர்த்தரையே
3. எனது பெலனும் எனது மீட்பும்
கீதமுமானார்
நம்பியிருக்கும் கேடயமும்
கோட்டையுமானார்--- கர்த்தரையே
4. கர்த்தர் எனது பக்கம் இருக்க
எதற்கும் பயமில்லை
கடுகளவு பாவம் என்னை
அணுக முடியாது --- கர்த்தரையே
5.வல்லமை மிக்கவர் செயல்கள் பல
எனக்குச் செய்தாரே
உயிரோடிருந்து உலகத்திற்கு
எடுத்துச் சொல்லுவேன் --- கர்த்தரையே
6.வீடு கட்டுவோர் புறக்கணித்தது
மூலைக் கல்லாயிற்று
கர்த்தரே செய்தார் கண்களுக்கெல்லாம்
ஆச்சரியம் இது --- கர்த்தரையே