Wednesday, 2 October 2019

Rojapoo Vasamalargal Nam ரோஜாப்பூ வாசமலர்கள் நாம்

Rojapoo Vasamalargal Nam
ரோஜாப்பூ வாசமலர்கள் நாம் இப்போ
நேச மணாளர் மேல் தூவிடுவோம் (2)

1. மல்லிகை முல்லை சிவந்தி பிச்சி
மெல்லியர் சேர்ந்து அள்ளியே வீசி
நல்மணமக்கள் மீது நாம்…
எல்லா மலரும் தூவிடுவோம் – ரோஜாப்பூ

2. மன்னனாம் மாப்பிள்ளை பண்புள்ள பெண்ணுடன்
அன்றிலும் தேனும் போல் ஒன்றித்து வாழ
ஆண்டவர் ஆசீர்வதிக்க…
நம் வேண்டுதலோடு தூவிடுவோம் – ரோஜாப்பூ

3. புத்திர பாக்கியம் புகழும் நல் வாழ்வும்
சத்தியம் சாந்தம் சுத்த நல் இதயம்
நித்திய ஜீவனும் பெற்றிவரென்றும்…
பக்தியாய் வாழ்ந்திட தூவிடுவோம் – ரோஜாப்பூ

4. கறை திரை அற்ற மணவாட்டி சபையை
இறைவனாம் இயேசு தன்னுடன் சேர்க்கும்
மங்கள நாளை எண்ணியே இப்போ…
நேசமணாளன் மேல் தூவிடுவோம் – ரோஜாப்பூ

Thammandai Vantha Palarai தம்மண்டை வந்த பாலரை

Thammandai Vantha Palarai
1. தம்மண்டை வந்த பாலரை
ஆசீர்வதித்த ரட்சகர்,
இப்போதும் சிறுவர்களை
அணைக்கத் தயையுள்ளவர்.

2. ஆ, இயேசுவே, இப்பிள்ளையை
அணைத்து ஏந்தியருளும்
அளவில்லாசீர்வாதத்தை
அன்பாகத் தந்திரட்சியும்.

3. குழந்தைகளுக் காகவும்
மரித்துயிர்த்த   ஆண்டவர்
சிறந்த நன்மை வரமும்
தரக்  காருண்ய முள்ளவர்

Logam Aalum Aandavar லோகம் ஆளும் ஆண்டவர்

Logam Aalum Aandavar
1. லோகம் ஆளும் ஆண்டவர்,
         ஆணும் பெண்ணும் செய்தனர்,
         இரு பேரும் வாழவே
        ஆசீர்வாதம் தந்தாரே.

     2. ஆதலால் விவாகமே
         மேன்மையுள்ள தாயிற்றே;
          இந்த நன்மைக்காகவும்
          ஸ்தோத்திரம் உண்டாகவும்.

       3. தேவ வாக்குக் கேற்றதாய்
           விசுவாச முள்ளோராய்
           நடப்போர்க்கு நன்மையே
           தவறா தளிப்பாரே.

       4. இந்த இரு பேரையும்
           கர்த்தரே கடாட்சியும்
          இவரால் புகழ்ச்சியே
          தேவரீர்க்குண்டாகவே.


Enthan Aathma Nesar Yesuvai எந்தன் ஆத்ம நேசர் இயேசுவை

Enthan Aathma Nesar Yesuvai
எந்தன் ஆத்ம நேசர் இயேசுவை 
பாவ பாரத்தோடு   நிற்கின்றோம்
இன்பமானாலும் துன்பமானாலும்
உந்தன் சிலுவை சுமந்து செல்வேனே

1. என் அந்தரங்க ஜீவியம்
கறை படிந்த சாவின் ஓவியம்
என் சாவின் பின் முதல்
உம்மைக் காணா நீசன் ஆவேனோ
என் ஆவியும் உம்மை சேராமல்
ஏங்கி அலைந்து திரியுமோ  தேவா  --- எந்தன்

2. உம்  ராஜரீக  நாளிலே
பரிசுத்தவான்கள் நடுவில்
உம்மைக்காணும் நான் தூர நிற்பேனோ
என்னை ஏற்றுக்கொள்ளும்  என் தேவா
யாதும் அற்றோனாய் எந்தன் பாவத்தை
நினைத்து  அழுது  நிற்பேனோ தேவா  --- எந்தன்

Enthan Ullathil Puthu Unarvu எந்தன் உள்ளத்தில் புதுஉணர்வு

Enthan Ullathil Puthu Unarvu
1.எந்தன் உள்ளத்தில் புதுஉணர்வு
எந்தன் வாழ்வினில் புதுமலர்ச்சி
எந்தன் நடை உடை பாவனை சொல் செயலும்
எந்தன் இயேசுவால் புதிதாயின

புதுவாழ்வு புது ஜீவன் புதுபாடல்
என்னை சந்தித்த இயேசு தந்தார்
ஆடிப்பாடி உள்ளம் ஆர்ப்பரிப்பேன்
ஆண்டவர் சமூகத்தை அலங்கரிப்பேன்

2.கதரேனரின் கடற்கரையில் கல்லறையிடை
வாசம் செய்த பொல்லா ஆவி
நாதர் பாதம் பணிய நல்ல
அற்புத மாற்றம் பெற்றான்   --- புதுவாழ்வு

3.ஓடையில் உருண்டோடி வரும்
சின்னக் கற்களும் வடிவம் பெறும்
சின்னத் தாவீதுக்கும் கோலியாத்தை
வீழ்த்த கவண்கல் ஆயுதமாகிடும்  --- புதுவாழ்வு

4. கள்ளனும் கொள்ளைக்காரனான
குள்ளன் சகேயுவும் மீட்படைந்தான் 
உள்ளபடி யாவும் நாதரிடம் அறிக்கை செய்தான்
வெள்ளம் போல் மகிழ்வு பெற்றான்  --- புதுவாழ்வு

Neengatha Pavam Neengathatheno நீங்காத பாவம் நீங்காததேனோ

Neengatha Pavam Neengathatheno
நீங்காத பாவம் நீங்காததேனோ நீங்கிடும் நாள்தானிதோ
பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர் வாவென்று அழைக்கிறார்

1. காணாத ஆட்டை தேடி உன் நேசர் கண்டுன்னை சேர்த்திடுவார்
பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர் வாவென்று அழைக்கிறார்

2.என்பாவம் போக்கி என்னையும் மீட்டார் உன்னையும் மீட்டிடுவார்
பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர் வாவென்று அழைக்கிறார்

3.நினையாத நேரம் மரணம் சந்தித்தால் எங்கு நீ சென்றிடுவாய்
பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர் வாவென்று அழைக்கிறார்

Thambiye Kel Thangaiye Kel தம்பியே கேள் தங்கையே கேள்

Thambiye Kel Thangaiye Kel
தம்பியே கேள் தங்கையே கேள்
தேவனின் எச்சரிப்பை கவனித்து கேள்
எண்ணாகமம் முப்பத்திரண்டு
இருபத்தி மூன்றாம் வசனத்தைக் கேள்
உங்கள் பாவம் உங்களையே
தொடர்ந்து பிடிக்கும் என அறியுங்கள்
இயேசுவை உன் உள்ளத்தில் அழைத்தால்
பாவம் இனி உன்னை தொடர்ந்திடாதே