1.வாழ்வினிலே ஒளி வீசிட வானவர் பிறந்தனரே
வாழ்க்கையிலே இருள் அகல தூயவன் உதித்தனரே
ஆதித் தந்தை ஆதாம் ஏவாள் பாவம் போக்கிடவே
ஜோதித் திரு தேவபாலன் ஜோதியாய் அவதரித்தார்
கன்னியின் பாலனாய் முன்னணையில் நிலமிதில் பிறந்தனரே
போற்றிடுவோம் போற்றிடுவோம் இறைவனைப் போற்றிடுவோம்
2. அன்னாளும் சிமியோனும் ஆர்வமாய் சென்றேகி
பொன்னான பாலனையே கண்டு மகிழ்ந்தனரே
விண்ணோரும் மண்ணோரும் புகழ்ந்து சாற்றிடவே
விண்ணின் மணி புல்லணையில் அழகுடன் தவழ்ந்தாரே
3. ஏதேனெனும் தோட்டத்திலே ஏவையால் வந்த வினை
எந்நாளும் ஓங்காமலே அன்றலன் அகற்றிடவே
பூதலத்தில் புண்ணியமாய் கிருபைகள் செய்திடவே
பூவுலகில் புனிதமான ஆசிகள் அளித்திடுவோம்
4. மாடடையும் கொட்டிலிதில் மானிடன் தோன்றினாரே
கேடுகளை நீக்கிடவே காவலன் உதித்தனரே
பாவிகளாம் மாந்தர்களை பரிசுத்தமாக்கிடவே
பாவிகளின் நேசர் அவர் பாரினில் அவதரித்தார்